வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

25 تغريدة 4 قراءة Nov 18, 2023
‼️ஆன்மீகப் பதிவு‼️
\!/ பட்டை நாமம் போட்ட கதை👇
தொல் தமிழ்நாட்டின் வட எல்லையாக அமைந்த வடவேங்கட மலை.
7 குன்றுகள் அமைந்த அந்த மலையில் வாழ்ந்து வந்தனர் ஒரு மலைவாழ் பழங்குடி மக்கள். அவர்கள் தங்களை காட்டு விலங்குகளிடம் இருந்து காத்து கொள்ள ஒரு பெண் தெய்வத்தை சிலையாக வடித்து...(1/25)
அதை வணங்கி வழிபட்டு வந்தனர். அந்த பெண் தெய்வம் தான் மலைக்காளி.
நின்ற கோலத்தில் இருக்கும் அந்தக் காளி சிலையின் வலது கரம் கீழ் நோக்கி(பாதத்தை நோக்கி) உள்ளங்கையை காட்டியபடியும், இடது கரம் தொடையில் வைத்தபடியும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இதன் அர்த்தம், என் காலடியில்...(2/25)
காணிக்கை செலுத்தி எனை வணங்கினால், உனை நான் காத்தருள்வேன் என்பதாகும்.
அந்த மலைவாழ் மக்கள் வேட்டைக்கு செல்லும் போது காளியை வணங்கி விட்டு சென்றனர். பின், வேட்டையில் கிடைத்ததை காளியின் காலடியில் காணிக்கையாக்கி வணங்கி வந்தனர்.
காலங்கள் சென்றன. மலையில் அவர்கள் மட்டுமே...(3/25)
வாழ்ந்து, மலைக்காளியை வணங்கி வந்த நிலையில், பூணூல் அணிந்த ஒரு கூட்டம் புதிதாய் அந்த மலையேறி வந்தது.
நீங்கள் வணங்கும் காளிக்கு charge (சக்தி) இல்லை. அதற்கு charge ஏற்ற எங்களிடம் மட்டுமே sanskritic charger இருக்கு. அதுக்கு முதல்ல power வேணும். அந்த power வேணும்னா, ஆகம...(4/25)
விதிப்படி கோவில் கட்டினா மட்டும் தான் அது கிடைக்கும் என மலைவாழ் மக்களின் காளியை காலப்போக்கில் கபளீகரம் செய்தது சமஸ்கிருத சனாதன நூல் கூட்டம்.
காலங்கள் ஓடியது. சனாதனத்தின் மற்ற மதங்களையும், இந்த மண்ணின் மற்ற வழிபாட்டு முறைகளையும் வாரி சுருட்டி வாயில் போட்டு விழுங்கி...(5/25)
வளர்ந்து வந்தன சைவ மதமும், வைஷ்ணவ மதமும்.
அப்படி அந்த மலைக்காளியை சைவ மதத்துக்கு மாற்ற முடிவு செய்தனர் காளியைக் கைப்பற்றி இருந்த நூலிபான்ஸ்.
மலைக்காளியின் கரங்களில் ஈஸ்வரனின் நாகபூஷணம் (நாகக் காப்பு) மாட்டப்பட்டது. அதுவரை சனாதன சாக்த மதத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த...(6/25)
மலைக்காளி, சைவ மதத்துக்கு மதம் மாற்றப் பட்டாள்.
அது மட்டுமா? வேங்கட மலையின் மலைக்காளி எனும் பெண்ணாக இருந்த அவள், வேங்கட மலையின் ஈஸ்வரனாக, வெங்கடேஸ்வரனாக பாலின மாற்றமும் செய்யப்பட்டாள்.
இதைக் கண்ட மலைவாழ் மக்கள்,
"டேய் எங்கடா இங்கிருந்த எங்க பெண் தெய்வத்தை காணோம்?" என...(7/25)
நூலிபான் கூட்டத்திடம் சண்டை போட்டனர்.
"இதோ பாருடா அம்பி. இந்த சாக்த மதத்துக்கு எல்லாம் இப்ப value வே இல்லாம போயிடுச்சு. சைவமும், வைஷ்ணவமும் தான் இப்ப top ல போயிண்டு இருக்கு. இது ரெண்டுத்துல ஏதாவது ஒன்னுத்துல சேர்ந்தா தான் நல்லா, கல்லாவை full ஆ கட்ட முடியும்.
அதுவும்...(8/25)
இல்லாம மலைக்காளின்னா கறியும், சோறும் ஆக்கிட்டு வந்து படைப்பா. அதெல்லாம் எங்களவாக்கு ஒத்துக்காது. ஆகமமும் அனுமதிக்காது. அதான் அசைவக் காளியை 'சைவமா' மாத்திட்டோம். இனிமே collection அள்ளப் போறது பாருங்கோ" என்றனர் நூலிபான்ஸ்.
"யோவ்! எங்க சாமிய வச்சி உங்களவாக்கு collection...(9/25)
கிடைக்கும். நாங்க என்ன சிரைக்கவா இங்க இருக்கோம்? எங்களுக்கு என்ன கிடைக்கும்? " எனக் கேட்டனர் மலைவாழ் மக்கள்.
"அட இது நல்லா இருக்கேடா அம்பி. நீங்க என்ன பண்றீங்க, கோவிலுக்கு வெளியே உக்காந்து வர்றவன், போறவனுக்கு எல்லாம் மண்டைய சிரைச்சி விட்டு collection பாருங்க. நாங்க...(10/25)
கோவிலுக்கு உள்ள இருந்து collection பாக்குறோம். உங்களுக்கும் காணிக்கை கிடைக்கும், எங்களுக்கும் காணிக்கை கிடைக்கும்" எனக் கூறி மலைவாழ் மக்களுக்கு மொட்டை அடித்தனர் நூலிபான்ஸ்.
இப்படியாக நாளொரு காணிக்கையும், பொழுதொரு மொட்டையுமாக வளர்ந்து வந்த வேங்கடமலைக்கு, ஒரு நாள் வந்து...(11/25)
சேர்ந்தான் அந்நாளைய பிரபலமான வைஷ்ணவ மதமாற்ற மிஷனரி கைக்கூலி ராமானுஜன்.
வந்தவன் காதில், மலைக்காளியை வெங்கடேஸ்வரனாக சைவ மதத்துக்கு மதம் மாற்றிய செய்தி விழுகிறது.
"நாம கஷ்டப்பட்டு எல்லாரையும் வைஷ்ணவ மதத்துக்கு மாத்தி வைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்துண்டு வந்தா, இவா ரொம்ப...(12/25)
Simple ஆ பெண் கடவுளையே ஆண் கடவுளா சைவ மதத்துக்கு மாத்திட்டாளே. இப்படியே போச்சுன்னா ஊருக்கு ஊர் சைவக் கோவில் மட்டும் தான் இருக்கும். அப்புறம் வைஷ்ணவம் தழைக்காது. இதை இப்படியே விடக் கூடாது. காளியை சைவ மதத்துக்கு மாத்திய காலிப்பயலுகளை இந்த கோவிலை விட்டே விரட்டியடிச்சு,...(13/25)
இந்த கோவிலை வைஷ்ணவ கோவிலா மாத்தணும். வாங்க போலாம்" எனத் தன்னுடைய தொண்டர் அடிபொடிகளை அழைத்துக் கொண்டு வேங்கட மலை ஏறி வெங்கடேஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தான் ராமானுஜன்.
வைஷ்ணவ நூல் கூட்டத்தை பார்த்த சைவ நூல் கூட்டம், "யார் நீங்க? நீங்க எல்லாம் இங்க வரக்கூடாது" என அவர்களை...(14/25)
விரட்டப் பார்த்தது.
"இது எங்கக் கோவில். எங்க வைஷ்ணவ மதத்துக்கு தான் இது சொந்தம். நீங்க சொல்ற மாதிரி இங்க இருப்பது உங்களோட வெங்கடேஸ்வரன் இல்ல. இது எங்களோட left hand batter வெங்கடேஷ் ஐயர்..ச்சே.. வெங்கடேசப் பெருமாள். அதனால நீங்க கிளம்புங்கோ" என சைவக் கூட்டத்துக்கு பதிலடி...(15/25)
கொடுத்தது ராமானுஜம்&கோ.
"பாருங்கோ. நீங்களே வெங்கடேஷ் ஐயர்னு ஒத்துண்டேள். நாங்க தான் ஐயர். நீங்க ஐயங்கார். அதனால வெங்கடேஷ் ஐயர் எங்களவா தான். எங்களுக்கு தான் சொந்தம். நீங்க ஷெத்த ஷூத்த ஷாத்திண்டு கிளம்பறேளா?" என பதிலடி கொடுத்தது ஷைவக் கூட்டம்.
இப்படியாக ஷைவமா, வைஷ்ணவமா...(16/25)
என வாதம் பறந்து கொண்டிருந்தது.
வித விதமாக பொய்க் கதைகள் சொல்லும் மோடி, அண்ணாமலை, சீமான், சவுக்கு சங்கரை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக பொய்க் கதைகளை அவிழ்த்து விட்டு அந்தக் கோவிலை வைஷ்ணவ கோவிலாக்கி கொண்டிருந்தான் மதமாற்ற மிஷனரி ராமானுஜன்.
வாதம், பிரதிவாதம் வளர்ந்து...(17/25)
கொண்டிருந்ததே தவிர எந்த முடிவும் எட்டப் படவேயில்லை.
வாதை வாதால் வெல்ல வேண்டும். சூதை சூதால் தான் வெல்ல வேண்டும் என உணர்ந்த ராமானுஜன், சூதை சூதால் வெல்ல முடிவெடுக்கிறான்.
"இங்க பாருங்கோ. இந்த கோவிலில் இருப்பது நீங்க சொல்ற மாதிரி வெங்கடேஷ் ஐயரா, இல்ல நாங்க சொல்ற மாதிரி...(18/20)
வெங்கடேச பெருமாளானு பகவானே சொல்லட்டும்" என்றான் ராமானுஜன்.
"அது எப்படி ஓய் பகவான் சொல்லுவான்? அது வெறும் கல்லுன்னு நம்மவா எல்லாத்துக்கும் தெரியாதா ஓய்?" என இரண்டு பக்கக் கூட்டத்திலும் கேள்விகள் எழுந்தன. ஒரே சலசலப்பு.
கூட்டத்தில் சலசலப்பை நீக்கி தான் சொல்ல வந்ததை சொல்ல...(19/25)
துவங்கினான் ராமானுஜன்.
"ஈஸ்வரனின் கையில் இருக்கும் மானையும், மழுவையும், விஷ்ணுவின் கையில் இருக்கும் சங்கையும், சக்கரத்தையும் இந்த கடவுள் இருக்கும் கருவறைக்குள் பூட்டி வைத்து விடுவோம். மறுநாள் காலையில் வந்து திறந்து பார்ப்போம். சிலை மானையும், மழுவையும் தரித்து இருந்தால்...(20/25)
அது நீங்க சொல்ற மாதிரி வெங்கடேஷ் ஐயர். அதுவே சங்கையும், சக்கரத்தையும் சூடி இருந்தால் அது நாங்க சொல்ற மாதிரி வெங்கடேச பெருமாள். என்ன டீலா நோ டீலா?" எனக் கேட்டான் ராமானுஜன்.
இதெல்லாம் நடக்கிற காரியமா எனும் அவநம்பிக்கையுடனே இதற்கு ஒப்புக் கொண்டனர் ஷைவ, வைஷ்ணவ நூலிபான்ஸ்.(21/25)
மானும், மழுவும், சங்கும், சக்கரமும் கொண்டு வரப்பட்டு கருவறைக்குள் வைக்கப்பட்டது. கருவறை முழுதும் யாரேனும் ஒளிந்து இருக்கின்றனரா என நன்கு சோதித்து சரிபார்த்த பிறகு கருவறை கதவுகள் பூட்டப்பட்டன.
அனைவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
நள்ளிரவு மீண்டும் அங்கே வந்தான் ராமானுஜன்.(22/25)
கருவறையை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.
கருவறைக்குள் நுழைய அபிஷேக நீர் வெளியேறும் துளையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதனால் கள்ளச் சாவி போட்டு பூட்டைத் திறந்தான்.
உள்ளே இருந்த மானையும், மழுவையும் சுக்கு நூறாக உடைத்தான். சங்கையும், சக்கரத்தையும் சிலையின் தோளில் ஒட்ட...(23/25)
வைத்தான். சிலைக்கு பட்டையாக நாமம் சாத்தி, கதவையும் பழையபடி சாத்தி, அதை மீண்டும் கள்ளச்சாவியால் பூட்டி விட்டு, ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா என்பது போல தனது அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டு கமுக்கமாக படுத்துக் கொண்டான் ராமானுஜன்.
மறுநாள் காலையில்,..(24/25)
ஷைவ, வைஷ்ணவ கோஷ்டி முன்னிலையில் கருவறை திறக்கப்பட்டது.
உள்ளே வெங்கடேஷ் ஐயர் சங்கையும், சக்கரத்தையும் தோளில் ஒட்டிக் கொண்டு, கண்ணை மறைக்கும் அளவுக்கு பட்டை நாமத்தை சாத்திக் கொண்டு வெங்கடேஷ் பிரசாத்தாக.. ச்சே..sorry.. வெங்கடேச பெருமாளாக காட்சி அளித்துக் கொண்டிருந்தான்.🙏
(25/25)

جاري تحميل الاقتراحات...