Sex assigned at birth பிறப்பால் பாலினம் என்ன என்பதை நிர்ணயம் செய்தல் இது ஆண் அல்லது பெண் என்று இரு பாலினமாக மட்டுமே சொல்ல முடியும் external genital anatomy வைத்து இதை நாம் சொல்கிறோம். கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே நம்மால் இப்போதைக்கு சொல்ல முடியும்.
gender identity என்பது வேறு, ஒரு குழந்தை வளரும் போது அது தன்னை எந்த பாலினமாக உணர்கிறது என்பதை அந்த குழந்தை முடிவு செய்ய வேண்டும். இதை வேறு யாரும் முடிவு செய்ய முடியாது. Facebook இல் பாலின தேர்வுகள் 56 இருக்கின்றன. Facebook in UK வில் 71 பாலின தேர்வுகள் இருக்கின்றன.
external genital anatomy யை மட்டும் வைத்து நாம் ஒரு குழந்தை ஆண் அல்லது பெண் என்று முடிவு செய்து. ஆண் என்றால் எப்படி இருக்க வேண்டும் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறைக்கு உட்படுத்துகிறோம்.
ஆண் அழ கூடாது கூந்தலை நீளமாக வளர்க்க கூடாது லிப்ஸ்டிக் போடக்கூடாது pant தான் போடணும் சமைக்க கூடாது.
பெண் மிகுந்த அன்போடு இருக்க வேண்டும் நீளமான கூந்தல் புடவை மல்லிகைப்பூ இதெல்லாம் பெண்ணுக்கு உரியது என்று
பெண் மிகுந்த அன்போடு இருக்க வேண்டும் நீளமான கூந்தல் புடவை மல்லிகைப்பூ இதெல்லாம் பெண்ணுக்கு உரியது என்று
ஆண் எப்படி இருக்க வேண்டும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சமூகம் தான் முடிவு செய்கிறது.
கால ஓட்டத்தில் இவற்றில் பல மாறுதல்கள் நடக்கின்றன. 100 வருடங்களுக்கு முன்பு பெண் ஆண் உடை அணிந்து செல்ல முடியாது.
கால ஓட்டத்தில் இவற்றில் பல மாறுதல்கள் நடக்கின்றன. 100 வருடங்களுக்கு முன்பு பெண் ஆண் உடை அணிந்து செல்ல முடியாது.
ஆண் வீட்டில் சமைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாது. ஆனால் இப்போ இதெல்லாம் மாறி வருகிறது. stay at home dad என்ற புதிய பதங்கள் தோன்றுகின்றன இவை எல்லாம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் தான்.
stay at home dad என்ற சொல் உருவாகிவிட்டதாலேயே எல்லா ஆண்களும் இனி வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொருள் இல்லை. single mother என்ற சொல் இருப்பதால் எல்லா பெண்களும் ஆண் துணையின்றி குழந்தைகளை தனியாக வளருங்கள் என்று பொருள் இல்லை.
இவை எல்லாம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவே.
Cisgender என்பவர்கள் பிறப்பால் என்ன பாலினம் இருந்ததோ அந்த பாலினத்திற்குரிய சமூக வரையறைகளை பின்பற்றுபவர்கள். உதாரணம் பெண்ணுறுப்புடன் பிறந்தவர்கள் பெண். அவர்கள் சேலை கட்ட வேண்டும். குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்,
Cisgender என்பவர்கள் பிறப்பால் என்ன பாலினம் இருந்ததோ அந்த பாலினத்திற்குரிய சமூக வரையறைகளை பின்பற்றுபவர்கள். உதாரணம் பெண்ணுறுப்புடன் பிறந்தவர்கள் பெண். அவர்கள் சேலை கட்ட வேண்டும். குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்,
சமைக்க வேண்டும், பூ வைக்க வேண்டும், ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சமூக நியதியுடன் ஒத்து போகிறவர்கள் Cisgender.
transgender என்பவர்கள் பிறப்பால் என்ன பாலினம் இருந்ததோ, அதற்கு எதிர் பாலினத்திற்கு உரிய சமூக நியதிகளை பின்பற்றுபவர்கள்.
transgender என்பவர்கள் பிறப்பால் என்ன பாலினம் இருந்ததோ, அதற்கு எதிர் பாலினத்திற்கு உரிய சமூக நியதிகளை பின்பற்றுபவர்கள்.
உதாரணம் ஆணுறுப்புடன் பிறந்தவர்கள் பெண்ணுக்கு என்று சமூகம் வகுத்திருக்கும் நியதிகளை பின்பற்ற விரும்புவார்கள். தன்னை பெண்ணாகவே உணருவார்கள்.
Non-binary என்பவர்கள் இரு பாலினத்திற்கும் உரிய நியதிகளை பின்பற்றுவார்கள்.
Non-binary என்பவர்கள் இரு பாலினத்திற்கும் உரிய நியதிகளை பின்பற்றுவார்கள்.
ஒரு பெண், நான் பெண் தான் என்று சொல்லி boy cut பண்ணி கொண்டு, jeans போட்டு கொண்டு, நான் ஏன் கல்யாணம் பண்ணவேண்டும் என்று கேட்டால் அவள் புரட்சி பெண் என்று அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதே பெண் நான் Non-binary என்றால் நாம் அதிர்ச்சி அடைகிறோம். ஏன்?
புரட்சி பெண் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அவள் Non-binary என்கிறாள். இங்கு சொல் தான் வேறுபடுகிறது ஆனாலும் அய்யய்யோ போச்சு எல்லாம் குடி முழுகி போச்சு என்று நாம் பயப்பட காரணம் இது புதிதாக இருக்கிறது. நாம் இதுவரை பார்க்காததாக இருக்கிறது.
batsman என்ற சொல் இரு பாலினத்தவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என batter என்று மாற்றப்படுகிறது. இது போல ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கை முறைக்கு ஒரு பெயர் வழங்கப்படுகிறது. அந்த பெயரை அவர்கள் அங்கீகரிக்க சொல்கிறார்கள் அவ்வளவுதான்.
குடும்ப அமைப்பு சிதறிவிடும் குழந்தைகள் கெட்டு போய்விடுவார்கள் என்பது சும்மா சப்பைக்கட்டு. குடித்துவிட்டு அடிக்கும் கணவன், பொறுப்பில்லாமல் குழந்தைகளை விட்டுவிட்டு செல்லும் பெற்றோர்கள், சதா கணவனை நச்சரித்து குடும்ப நிம்மதியை சீர்குலைக்கும் பெண்,
பிள்ளைகளின் திருமண வாழ்வில் மூக்கை நுழைக்கும் பெற்றோர்கள், domestic violence, போன்றவை தான் குடும்ப அமைப்பை சிதைக்கின்றன குழந்தைகள் மனநலனை பாதிக்கின்றன.
யாரோ ஒருவர், எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன். நான் ஆண், ஆனால் பெண்கள் அணியும் ஆடைகளை அணிவதில் எனக்கு விருப்பம் அவர்கள் அணியும் மேக்கப் போடுவதால் எனக்கு சந்தோசம். சமூகம் பொதுவாக ஆண் என சொல்லும் வரையறைக்குள் நான் வரமாட்டேன் எனக்கு நான் drag queen என்று பெயர் வைத்து கொள்கிறேன்.
நான் ஆண் அல்ல drag queen என்றால் அதனால் நமக்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஆணாக இருங்கள் அவர் drag queen ஆக இருக்கட்டும்.
جاري تحميل الاقتراحات...