16 تغريدة 14 قراءة May 25, 2023
bonobos மற்றும் chimpanzees இரண்டுமே மனிதனுக்கு மிக நெருக்கமான genetic ஒற்றுமைகள் கொண்டவை. இதில் chimpanzees, bonobos விட கொஞ்சூண்டு நமக்கு இன்னும் அதிக நெருக்கம். நம்ம 3 பேருக்குமே ஒரே ancestor தான்.
இதுல bonobos குரங்கு matriarchal society யை கொண்டது. தாய்வழி சமூகம். பெண் குரங்குகள் தான் ஆதிக்கம் செலுத்தும். உணவு விநியோகஸ்த உரிமை, பஞ்சாயத்து எல்லாம் பெண் குரங்குகள் தான் செய்யும். ஒரு பெண் குரங்குக்கு பல sexual partner இருக்கும். ஆணை சார்ந்து இருக்காது.
குட்டிகளை தானே பராமரிக்கும். பெண் குட்டிகள் வளர்ந்தாலும் தாயுடன் எப்போதும் உறவில் இருக்கும். எல்லா குரங்குக்கும் உணவை சமமாக பங்கிட்டு தாய் குரங்கு வழங்கும்.
மனிதர்களில் எப்படி ஆண் தன் பெற்றோர்களுடன் வாழ்கிறானோ அதுபோல bonobo குரங்குகளில் பெண்கள் எப்போதும் தாயுடன் இருப்பார்கள்.
ஆண் only passing clouds.
bonobos தாய்வழி சமூகம் மிக அமைதியான சமூகம். பிரச்சனைகள் எதுவுமில்லாத loving society. ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாக இருக்கும். அடுத்த நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் போன்ற எண்ணம் இல்லாத , இருக்கிற உணவை பகிர்ந்து சாப்பிட்டு நிம்மதியா இருப்போம்
எதுக்கு சண்டை என்பதான ஒரு peaceful cooperative society.
இதற்கு நேர்மாறானது chimpanzees. chimpanzees களிடம் இருப்பது patriarchal social structure. ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகம். அங்கு alpha ஆணை தேர்ந்தெடுக்க, அதாவது தலைவரை தேர்ந்தெடுக்க மூர்க்கமான சண்டை நடக்கும்,
ஆண்கள் குழு ஒன்று சேர்ந்து சதி ஆலோசனையில் ஈடுபடும். இதன் விளைவாக intergroup conflict அதாவது உட்கட்சி பூசல்கள் அதிகம் இருக்கும்.
தலைவர் தனக்கு பிடித்த பெண் குரங்கை தேர்ந்தெடுப்பார். பெண், உணவு, எல்லை எல்லாமே தலைவர் நிர்ணயித்தது தான்.
தலைவர் தேர்ந்தெடுப்பது போக மீதி இருக்கும் பெண்ணுக்கும் உணவுக்கும் ஆண்களுக்கு இடையே அடிதடி நடக்கும். பெண் chimpanzees, ஆணுக்கு அடங்கி குட்டிகளை பார்த்துக்கொண்டு இருக்கும். தலைவரிடம் நாசூக்கா பேசி தனது குட்டியை அதிகாரத்தில் வைக்க முயற்சி செய்யும்.
ஆற்றின் இக்கரையில் உணவு தட்டுப்பாடு அதனால் கொரில்லாக்கள் அடித்துக்கொள்ளும் சிம்பன்சி ஆனது. அந்த பக்கம் உணவு ஏராளம் அதனால் கொரில்லாக்கள் பாசமிகு bonobo குரங்கு ஆனது என்பது interesting speculation ஆனால் அதற்கு போதுமான conclusive evidence இல்லை.
ஆகையால் இந்த theory யை பெருவாரியான scientific community ஒப்புக்கொள்வதில்லை. resource availability மற்றும் competition ஒரு காரணியாக இருந்தாலுமே அவை மட்டுமே social structures உருவாக காரணம் இல்லை. African Lion களிடமும் matriarchal society இருக்கிறது.
பெண் சிங்கங்கள் வேட்டையாடுகின்றன அங்கும் உணவு தட்டுப்பாடு இருக்கின்றன. மற்ற விலங்குகளிடம் எல்லைக்கான போட்டி இருக்கிறது ஆனால் இவை patriarchal social structure ஐ அங்கு உருவாக்குவதில்லை.
The Lion King என்று தலைப்பு வைத்ததை விட The Lion Queen என்று தான் வைத்திருக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு lion pride ஐ வழிநடத்துவது அதன் matriarch தான். பெண் சிங்கம்! Mufasa அல்ல சிம்பாவின் தாய் Sarabi தான் நிஜத்தில் தலைவராக இருந்திருக்க முடியும்.
இது போக killer whales, African elephants, spotted hyenas, lemurs களிடமும் நாம் matriarchal society யை காணமுடியும்.
பெண் spotted hyenas களிடம் androgens (male sex hormones) அதிகமாக சுரப்பதால் அவையும் மூர்க்கமாக நடந்து கொள்ளும் இதுவும் பெண் ஆதிக்க சமூகத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த மூர்க்கம் எதிரி விலங்குகளிடமிருந்து தனது குழுவை காப்பற்ற இருக்குமே அன்றி,
சிம்பன்சிகளை போல தனது குழுக்குள் தலைவர் போட்டிக்கு சண்டை, தனது குழுக்குள்ளேயே உணவுக்காக சண்டை என்று இருக்காது.

جاري تحميل الاقتراحات...