👁️ 🌹👁️
👁️ 🌹👁️

@malarvili1998

7 تغريدة 3 قراءة Apr 24, 2023
#கட்டிடங்களின்_கதை
புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள் இன்று.
புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.
இது 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது.
வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால்,
புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.
கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை
அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்.
கோட்டை புனித ஜார்ஜ் பிறந்த நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால்,
இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது.
இக் கோட்டை, இப்பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று.
இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது.
தென்னிந்தியாவில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
படங்கள் உதவி
@teamasterdiary
மூலம் : TP ஜெயராமன்

جاري تحميل الاقتراحات...