Aravindakshan B R
Aravindakshan B R

@RealAravind36

16 تغريدة 21 قراءة Apr 23, 2023
காகிதப் புலி..
ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும்,கண்டிப்பதற்கும்,
தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும்
வன்மத்தோடு எதிர்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது
2021 தேர்தல் வரை,தமிழகத்தில்
ஊழல் குறித்து வாயே திறக்காத
@BJP4TamilNadu திமுக ஆட்சி அமைந்த பிறகு ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் போல
1
வேஷம் தரிப்பது அயோக்கியத்தனமானது
சமீபத்தில் @BJP4TamilNadu வெளியிட்ட DMK files என்ற வீடியோவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் குப்பைத்தொட்டியில் வீசுவதற்கு கூட தகுதியற்றது.
பொதுவெளியில் அதாவது தேர்தல் ஆணையத்தில் @ECISVEEP பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்யப்பட்ட விபரங்கள் அவை
2
ஆனால்,
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த ஒரிஜினல் ஆவணங்களை கூட DMK files வீடியோவில் காட்டவில்லை
மாறாக எதைக் காட்டினார்கள் என்றால்
@FordFoundation என்ற பெயர் கேள்விப்பட்டுள்ளீர்களா?
அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுகிறதென்று அந்த அமைப்பை கண்காணிப்பில் வைத்திருக்கிறது மத்திய அரசு
3
@BJP4India வின் முக்கியமான தலைவர்கள் வாய்க்கு வந்தபடி கண்டபடி திட்டித்தீர்க்கும் Ford foundation நிதியுதவியுடன் இயங்கும் அமைப்பான ADR @adrspeaks மாநில வாரியாக திரட்டி இணையத்தில் வெளியிட்ட ஆவணங்கள் அவை.
அவற்றை திருடி ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல வெளியிட்டுள்ளனர் பிஜேபியினர்
4
சரி அதையாவது துல்லியமாக வெளியிட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை
ஏதோவொரு அடி முட்டாளிடம்,மட சாம்பிராணியிடம் DMK files வீடியோவை தயாரிக்கும் பொறுப்பை
@annamalai_k வழங்கியுள்ளார் என்று நினைக்கிறேன்
வாய்க்கு வந்த மதிப்பை போட்டு,
புகாரின் மீதான நம்பகத்தன்மையை நாசப்படுத்தியுள்ளனர்
5
எதிராளியை விழ்த்துவதற்கு அம்பை சரியாக எய்ய வேண்டும்.
ஆனால்
@BullsEyeReturns போன்ற கோமாளிகளின் யோசனையை கேட்டால் விளங்குமா ?
DMK files என்ற வீடியோ எவ்வளவு சூர மொக்கையானது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.
கவனியுங்கள்
6
DMK files வீடியோவில் சபரீசனுக்கு சொந்தமானதென காட்டப்படும் @GSquareHousing நிறுவனம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 33 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் உயர்ந்திருப்பதாக கூறியுள்ளனர்.
அதாவது 2019-20 ல் ரூ.53 கோடி மட்டுமே அந்நிறுவனம் வருவாய் காட்டியதாக DMK files-ல் கூறியுள்ளனர்
7
2020-2021
2021-2022
2022-2023 ல் ஜிஸ்கொயர் நிறுவனத்தின் வருவாய் 33 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதென விவரிக்கிறது பிஜேபி வெளியிட்ட வீடியோ..
விருப்பு வெறுப்பின்றி நீங்களே யோசியுங்கள்.
2020-21 ல் முழுக்க கொரோனா லாக்டவுன் காலம்
8
2021 - ல் திமுக ஆட்சியமைந்த பிறகு மீண்டும் லாக்டவுடன் கடுமையாக்கப்பட்டது.
நாடு முழுக்க கொரொனா தாக்கத்தால்
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அளவில்லாத உயிரிழப்புக்கள் ஏற்பட்டது.மயானங்களில் சடலங்கள் வரிசை கட்டி நின்றன
கிட்டத்தட்ட 2021 அக்டோபர் மாதத்திற்கு பிறகே ஓரளவு நிலைமை சீரானது
9
.
இந்தக் காலக்கட்டத்தில் தான்
@GSquareHousing என்ற நிறுவனத்தின் வருவாய் 33 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதென @annamalai_k நெஞ்சு வெடிக்க பேசுகிறார்.
மேடைப்பேச்சுக்கு ஓகே
அவரது விசிலடிச்சான் குஞ்சுகளை குதூகலப்படுத்தும்
ஆனால்
சட்டப்படி இந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் எடுபடுமா?
10
DMK files வீடியோவில் சொல்லப்பட்டுள்ள 1.34 லட்சம் கோடி சொத்துப்பட்டியலில் 33,000 கோடி
ஜிஸ்கொயர் என்ற ஒரு நிறுவனத்தின் வருவாய் கணக்காக மட்டும் காட்டப்பட்டுள்ளது
அதில், அந்நிறுவனத்தின் சொத்தாக ரூ.1237 கோடி மதிப்புள்ள நிலம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது
11
ஆனால் அந்த நிலம் யாருக்கு சொந்தமானது தெரியுமா ?
கர்நாடக மாநிலத்தின் பிஜேபி அரசாங்கத்தின் பவர்ஃபுல் அமைச்சரான ஸ்ரீராமுலு @sriramulubjp
என்பவருக்கு சொந்தமானது
அவர், கடந்த 07-02-23 அன்று தான் அந்த நிலத்தை @GSquareHousing நிறுவனத்திற்கு
24 கோடியே 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்
12
அதாவது ரூ.24 கோடிக்கு கர்நாடகாவின் பிஜேபி அமைச்சர் விற்பனை செய்த ஒரு சொத்தின் மதிப்பை @BJP4TamilNadu தலைவர்
ரூ.1237 கோடி என மக்கள் மத்தியில் கணக்கு காட்டுகிறார்
2023 ம் ஆண்டு பிப்ரவரில் 24 கோடிக்கு விற்கப்பட்ட ஒரு சொத்து
ஏப்ரல் மாதத்தில் எப்படி அய்யா ரூ.1237 கோடியாக மாறும்
13
இதை குறைந்தபட்ச அறிவிருக்கும் யாராவது நம்புவார்களா அல்லது இது வழக்காக மாறினால்,
நீதிமன்றத்தில் நிற்குமா?
இப்படி வாய்க்கு வந்ததை உருட்டு உருட்டென உருட்டி DMK files என்று பெயரிட்டு,சித்திரை 1-ம் தேதி
வெளியிட்டுவிட்டார்கள்
ஆனால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா?
100% வாய்ப்பில்லை
14
இந்த வீடியோ அறிவு கெட்ட மடசாம்பிராணிகளை வசீகரிக்கவும்,
சில நூறு வாக்குகளை அதிகப்படுத்தவும் உதவுமே தவிர
அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள நபர்களை சட்டப்படி தண்டிக்க எந்த வகையிலும் ஒருபோதும் உதவாது
ஒருவேளை இது Fake Id யில் உலவும் தீவிரவாதிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்
15
ஆனால்,
அரசியல் ஆதாயத்திற்காக,
மூடர்களையும் முட்டாள்களையும் பயன்படுத்தி DMK files என்ற 5 பைசாவுக்கு உதவாத வீடியோ தயாரித்து வெளியிட்ட @BJP4TamilNadu -ன் தலைவர் @annamalai_k க்கு நன்றாகவே தெரியும்.
ஏனெனில் அவர் Ex.IPS அல்லவா ! 😊
16

جاري تحميل الاقتراحات...