Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

@BS_Prasad

5 تغريدة 12 قراءة Apr 13, 2023
இன்றைக்கு ஒரு paediatrician வந்திருந்தார். மிகவும் இளைஞராகத் தான் இருந்தார். கைக்குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது பற்றி ஒரு பத்து நிமிடம் வகுப்பெடுத்தார். அவர் சொன்னதில் முக்கியமானது தாய்ப்பால் அருந்தும் குழந்தை எப்போதும் தாயின் அருகில் தான் இருக்க வேண்டும். சில நேரங்களில்
தாய் இல்லாத நேரங்களில் ஒரு பெரிய டர்க்கி டவலை எடுத்து கயிறாக முறுக்கி படத்தில் உள்ளது போல செய்து அதன் நடுவில் படுக்க வைக்க வேண்டுமாம். அப்போதுதான் குழந்தைகளுக்கு தாயின் கருப்பையில் இருப்பது போன்ற ஃபீல் வருமாம். அழாதாம்.
இதை பேத்தியை வைத்து டெஸ்ட் செய்து பார்த்தேன். மிக சரியாக
ஒர்க் அவுட் ஆனது.
அவர் சொன்ன இன்னொரு விஷயம் keeps the child's brain very active. முதல் மூன்று மாதங்களில் மூளையானது senses of perception ஐ முழுமையாக உணரத் தொடங்கும் நேரம். அதனால் தாய்ப்பால் கொடுக்கும் போது அந்த தாய், குழந்தையிடம் ஏதாவது நல்ல விஷயங்களை பேசிக்கொண்டே இருக்க
வேண்டுமாம். இது தாய்ப்பால் கொடுக்கும் வரை தொடர வேண்டுமாம். குழந்தைகளுக்கு புரியாதுதான். ஆனாலும் இப்படி நிச்சயம் சொல்ல வேண்டுமாம்.
ஆக ஒரு குழந்தையின் attitude forming, character building ல் தாயின் பங்கு தான் மிகவும் முக்கியமாம். அந்த குழந்தை வளர்ந்து வாலிபமாகி நெறிகள் தவறி
நடந்தால் அதற்கு முழு காரணமும் தாய்தான் என்று அடித்துச் சொல்கிறார்.
ஆமாதானே?
வீர சிவாஜிகளும், அவர்களை இராமாயண, மகாபாரத கதைகள் சொல்லி உருவாக்கிய ஜீஜிபாய்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் தேட வேண்டும். 😔
Authour: Unknown
முகநூலில் வந்தது

جاري تحميل الاقتراحات...