பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

22 تغريدة Apr 20, 2023
விடுதலை என் பார்வை:
என்னுடைய முதல் பதிவாக இதை ஆரம்பிக்கிறேன். என்னுடைய சிந்தனை ஓட்டத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள உதவியாக இந்த பதிவை செய்கிறேன். என்னுடைய ஆச்சர்யமான ஒரு மனிதராக திரு. வெற்றி மாறன் அவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு வெற்றி, புகழ் வந்த பின்னும் எப்படி அவரால் ஒரு
சாதாரண மனிதராக இருக்க முடிகிறது என்று எனக்கு விளங்க வில்லை. மேலும் அவருடைய படைப்பில் அவர் தேர்ந்து எடுத்த காலம் அவர் அதற்கு செய்யும் உழைப்பு படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகிறது. கண்டிப்பாக இவர் பணத்திற்காகவோ புகழுக்காகவோ வந்த மனிதர் இல்லை என்பது மட்டும் நன்கு புலப்படுகிறது.
அம்பேத்கர் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். இதை அவர் சத்தமில்லால் அவருடைய படங்களின் வாயிலாக மிக அழகாக செய்து கொண்டு இருக்கிறார். அவரை வியக்கும் பலரில் ஒருவனாக இதை ஆரம்பிக்கிறேன்.
படத்தில் என்னை வியக்க வைத்த தருணங்கள்:
1.காதல்:
காதலை இவர் கையாண்ட விதம் சிலிர்ப்பை உருவாக்கியது. குமரேசன் அவ்வளவு கஷ்டத்திற்கு நடுவே அவனை மகிழ்வாக காதல் மாற்றுகிறது. ஒரு வசனம் வரும் "இவ்வளவு கஷ்டத்துலயும் உன்னால எப்படி டா சிரிக்க முடிகிறது" அந்த சக்தி காதலை மட்டுமே சார்ந்தது.
ஒரு போலீஸ்காரன் தன் குடும்பத்தை அழித்து விட்டான் என்று தெரிந்தும் எவ்வாறு அந்த பெண் ஒரு போலீஸ் மேல் காதல் கொண்டாள் என்பது வியப்பை தருகிறது. அதற்கு ஒரு வசனம் வரும் "இவ்வளோ நடந்தும் ஒரு போலீஸ் காரண கட்டிக்க சம்பாதிச்சுருக்க எவ்ளோ நம்பிக்கை மனுசங்க மேல வச்சுருக்க"
அதை கேக்கும்போது நாம் ஏன் மனிதர்களை நம்பாமல் இப்படி இருக்கிறோம் என்ற உணர்வு என்னை கேக்க தொடங்கியது. மனிதர்களின் மீதான நம்பிக்கை அந்த இடத்தில் வெளிப்பட்டு கொண்டு இருந்தது. வளையலை காட்டும் காட்சி, "சாப்பிட்டு நல்ல இருந்தா சொல்லுங்க தினமும் நானே செஞ்சு போடறேன்",
"இந்த ஊர்காரண மாரத்தான் பாத்துட்டு இருக்கேன்", போன்ற வசனங்களும் காட்சி அமைப்பும் காதலை கவிதைகளாக இதயத்திற்குள் கடத்தி சென்று விட்டது. காதலில் தொடுவது எவ்வளவு புனிதமானது உணர்வு பூர்வமானது என்று அந்த பாட்டின் நடுவில் கைகளை புடிக்கும்போது உணரலாம்.
தமிழரசி ஓட பாட்டி இறந்த பொழுதிலும் குமரேசனை ஊரார் விரட்டி விடாமல் அவனை காத்த தருணத்தில் காதல் மிளிர்கிறது.
காதலுக்கு உவமை சொல்ல முடியாது காதல் காதல் காதல். மொத்த படமும் காதலின் வழியேதான் நகர்கிறது.
தன் காதலியை காப்பாற்ற ஒருவன் எடுக்கும் முயற்சி எவ்வளவு தூரம் எனபடுத்த படமே..!!
ஏனெனில் குமரேசனுக்கு தெரியும் அங்கே என்ன சித்ரவதைக்கு அவள் ஆளாக்க படுவாள் என்று. அதிலிருந்து தப்பிப்பதை அவன் யோசிக்கும்பொழுது தான் வாத்தியாரை புடித்து கொடுத்தால் இவள் விடுதலை செய்ய படுவாள் என்று தெரிந்து அவரை புடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் குமரேசன்.
காதல் ஒருவனுக்கு எவ்வளவு துணிவையும் வேகத்தையும் கொடுக்கிறது.
2. தலைமை செயலாளர் கதாபாத்திரம் எனக்கு மிக பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. அவருடைய எண்ணம் சிந்தனை ஒரு போராட்டத்துக்கு அனுமதி கொடுப்பதற்கு அவர் நடத்தும் கலந்தாலோசனை அதற்கு அனுமதி கொடுப்பதற்கு அவர் சொல்லும் காரணம்,
அதை எவ்வளவு தூரத்திற்கு செயல் படுத்த வேண்டும் என்று அதற்கு வரைமுறை கொடுப்பது, இந்நேரத்தில் எந்த செய்தி வர வேண்டும் என அவர் முடிவு செய்வது, பொறுமையாக அரசாங்கத்திற்கு சாதகமாக அவர் எடுக்கும் முடிவுகள், அதிகாரத்தை அவர் பயன்படுத்தும் விதம், அமைதியாக அவர் மிரட்டும் விதம் என்று
அவருடைய கண்ணோட்டத்தில் இது வரை எவரும் காட்டிராத கண்ணோட்டத்தில் காத்திருப்பது மிரள வைக்கிறது. ஒரு தலைமை செயலருடைய கண்ணோட்டத்தை பதிவு செய்வது என்பது மிகவும் அரிது. அதை திரு. வெற்றி மாறன் அவர்கள் செய்திருப்பது வியக்க வைக்கிறது.
3. அதிகாரம்:
போலீஸ் நடத்தும் அராஜகம் மற்றும் கொடுமைகள் சொல்லி முடியாது. போலீஸ் மக்களுக்கு நடத்தும் கொடுமைகள் ஒரு புறம் இருக்க கடை நிலை ஊழியர்களை நடத்தும் விதம் கொடுமையின் அதிகாரத்தின் உச்சம். சாப்பாடுக்கு கணக்கு பார்ப்பது, மன்னிப்பு கேக்கமல் இருந்ததற்காக பணிச்சுமையை அதிகரிப்பது,
பெண்களுக்கு அம்மணமாக்கி அடிப்பது, என்று தொடர்கிறது. அதுவும், "அந்த மிளகாய் பொடியை எடுத்துட்டு வா" என்று சொல்லும்போது நம்மை அறியாமல் கண் கலங்குவதோடு கோவமும் வருகிறது.
4. வாத்தியார்:
சிலிர்க்க வைக்கும் ஒரு பெயர். ஆரம்பம் முதலே அவருக்கான அந்த கெத்து வைத்து கொண்டே போனாலும் இடைவேளையில் இப்படி ஒரு கொடூரனா என்று நமக்கு அவர்மேல் கோவம் வருகிறது. ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் கரணம் உண்மையில் அவனை அப்படி செய்வதில் தவறு இல்லை என்று என்ன தோன்றுகிறது.
போலீஸ் ஜீப்பில் ஏளனமாக சிரிப்பது எவ்வளவு தூரம் போலீஸை வெறுக்கிறார் என்று காட்டுகிறது. சுத்தி போலீஸ்காரர்ககளால் சூழ பட்ட போதும் கண்ணில் பயம் இல்லாமல் நின்று பார்க்கும்போது மிரட்டுகிறார். உயிர் தப்பி பிழைக்க ஓடும் ஒருவன் வீட்டிற்குள் நுழையும்போது "வரலாமா" என்று கேட்டு நுழையும்போது
சிலிர்க்கிறது.
அவருடைய அந்த ஒரு காட்சி போதும் அவர் எப்பேர்பட்ட மேன்மை பொருந்திய மனிதர் என்று. எப்படி ஒரு மனிதன் உயிர் பிழைத்து ஓடும் சமயம் இவ்வாறு கேக்க முடியும் என்று என்னால் அந்த வார்த்தை அந்த காட்சியை மறக்க முடியவில்லை இதை யோசித்து படத்தில் வைத்த வெற்றி மாறன் எப்படி ஒரு மேன்மை
பொருந்தியவராக இருக்க முடியும் என்று யோசிக்கும்பொழுது அவரை அந்த மூளையை, பண்பை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு மனிதனின் குணத்தை இதை விட ஒரு காட்சியில் வசனத்தில் வெளிப்படுத்தி விட முடியுமா என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கடந்தும் இது பேசும்.
போலீஸ் துரத்தும் அவர் சொல்லும் அந்த வார்த்தை "மக்களுக்கு ஏதும் ஆகி விட கூடாது உள்ளே போக சொல்லு " என்று மக்களை காப்பாற்றுவதில் அவர் காட்டிய கவனம் இவர் எவ்வாறு ரயிலுக்கு வெடி வைத்து தகர்த்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது.
கடைசியாக அடுத்த பார்ட் க்கு அவர்கள் கொடுக்கும் சிறு காட்சிகளில் வாத்தியார் பேசும் வசனங்கள் நிமிர வைத்து கைத்தட்டல்களை அள்ளுகிறது. யோசிக்க வைக்கிறது. முக்கியமாக " நாலு பெர வச்சு அடிச்சு அம்மணமாக்கி அப்புறம் உனக்கு நீயும் நானும் ஒன்னு னு புரியுது அப்புறம் பேச சொல்ற " னு சொல்லிட்டு
கால் மேல கால் தூக்கி போட்டு உக்கார இடம்லாம் தெறிக்குது..!! அப்போ நீ உன்னோட எண்ணம் எவ்வளோ கீழ்மையா இருக்கு னு ஒரு வார்த்தைல சொல்லிட்டு போய்ட்டாங்க. "புத்தகம் எழுதுனா அத படிச்சு இன்னும் 50 வருசத்துக்கு இவங்க வளந்து வருவாங்க" "இப்போ எழுதுற புக் இன்னும் 50 வருஷம் கழிச்சும் இம்பாக்ட்
கொடுக்கும்னா அந்த 50 வருசமா பிரச்சனைய தீர்க்கமா வச்சுருக்கிறது யார் தப்பு " இது போலீஸ் காரர்கள் பேசும் வசனம் சிந்திக்க வைக்கிறது. அதே போல் "100 குடும்பம் இருக்குற ஊருக்கு 100 அடி ரோடு போட்ட அது மக்களுக்கு கிடையாது", என்ற வசனமும் நம்மை சிந்திக்கவும் அரசியல் படுத்தவும் செய்யும்.

جاري تحميل الاقتراحات...