👁️ 🌹👁️
👁️ 🌹👁️

@malarvili1998

13 تغريدة 38 قراءة Mar 19, 2023
2000 வருடங்களுக்கு முன்பே அந்த தாவரம் வட மேற்கு இந்தியாவில் பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது.
அதை பற்றிய குறிப்புகள், கி.மு. 1500 களிலேயே சில நூல்களில் காணப் படுகிறது. சில சிவன் கோவில்களில் புனித பிரசாதமே. இந்த தாவரம் தான்.தாவர பாகங்கள் கொண்டு தயாரிக்கப் பட்ட பானங்கள் இன்றும் வட
இந்தியாவில் சட்ட பூர்வமாக விற்பனை செய்யப் படுகிறது.
அதன் பிசின், இலை, விதை பல விதமாக மருத்துவத்தில் பயன்பட்டது என சுஷ்ருத சம்ஹிதை உள்ளிட்ட நூல்களில் குறிப்பு உள்ளது
அந்த தாவரத்தின் தாவரவியல் பெயர் cannabis sativa
தாவரம் பற்றிய குறிப்பு கொண்ட நூல் ரிக் வேதம்.
தயாரித்தது சோம பானம்.
நீங்கள் ஊகித்து இருப்பது சரி
🤪கஞ்சா 🫢
முகலாய சாம்ராஜ்யம் நாசமா போனதுக்கு கூட இளவரசர்கள் சதா கஞ்சா போதையிலேயே மூழ்கி கிடந்தது தான்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இப்பயிர் சீனாவை அடக்கி ஆள ஆங்கிலேயருக்கு உதவியது, இதனால் உண்டான அபினி போர்களின் முடிவில் செஞ்சீனம் உருவாக முடிந்தது
போர்ச்சுகீசியர்கள் மூலம் ஏற்கனவே ஐரோப்பா கஞ்சாவை பற்றி அறிந்து இருந்தாலும், ஆங்கிலேயர் அதனை ஆயுதமாக சீனாவிற்கு எதிராக பயன்படுத்தியது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப, வேறு வழியின்றி இந்தியாவில் கஞ்சா பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலைக்கு வந்தது பிரிட்டிஷ் இந்திய அரசு
1961 ல் கூடிய போதை பொருள்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கஞ்சாவை "கடுமையானது" என வரையறுக்க,
அலறியடித்து ஓடிப்போய் சின்ன பிள்ளை தனமான விளக்கம் கொடுத்து, மஹாசிவராத்திரி main ஐட்டமே " இழுவையை போடு இஷ்டத்துக்கு ஆடு" என்பதால் இந்த தடை இந்துக்களின் மத உணர்வுக்கு எதிரானது என்றது
மத சாயம் பூசப் பட்டதால் வேறு வழியின்றி பெண்கள் மீது வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள ஹோலி அன்று அருந்தப்படும் bhang ஐ மட்டும் cannabis என்ற வரையறையில் இருந்து விடுவித்தது அந்த மாநாடு. அதே நேரம் கஞ்சா பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர 25 ஆண்டு காலக்கெடு விதித்தது
சொல்லியபடி Narcotic Drugs and Psychotropic Substances Act சட்டம் கொண்டு வரப்பட்டு கஞ்சா பிசின் மற்றும் பூக்கள் விற்பனையை தடை செய்தது. இலை மட்டும் விதை மீதான கட்டுப்பாடுகள் குறித்து மாநிலங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றது, புகையாக பிடிப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை
விளைவு?
உலகிலேயே கஞ்சா உபயோகத்தில் மூன்றாவது நகரமாக டெல்லியும் ஆறாவது பெரிய உபயோகிப்பாகராக மும்பையும் 2019 ல் வளர்ச்சி அடைந்தன
மேனகா காந்தி உள்ளிட்ட பிஜேபி பெருந்தலைகள், வட இந்திய சாதுக்கள் கஞ்சா பயிரிடுதல் மற்றும் விற்பனையை சட்ட பூர்வமாக்க போராடி வருவதால் விரைவில் முதலிடம் தான்
இதை எல்லாம் குறிப்பிட காரணம், Sony LIV OTT ல வெளியாகியுள்ள the accidental farmer & co
பொதுவா இந்தி படங்களில் பெரிய யோக்கியவான் மாதிரி கஞ்சவுக்கு எதிரா போராடுவான்.
ஆனா மஹாராஷ்டிராவ போதை ராஷ்டிர ஆக்கியதே பாலிவுட் தான், இதற்கு மாறாக Idukki Gold போன்ற மலையாள படங்கள்
அதை கூட தங்களுக்கே உரிய கவித்துவமாக சொல்லி இருப்பாங்க.
தென்னிந்தியாவில் முக்கியமான கஞ்சா உற்பத்தி கேந்திரம் மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சிகள் தான்.
தமிழிலோ அப்பாவி இந்தியர்களை குட்டி சுவர் அடிக்க கஞ்சா கடத்தும் பாக்கித்தானிய தீவிரவாதிகளை போலீஸ் தேடிக் கொண்டு இருக்கு
OTT தளங்களில் வளர்ச்சி எந்த வித கட்டுப்பாடும் இல்லாத உலகமயமான வக்ரங்களையும், வன்முறையையும் நம் ஆண்ட்ராய்டு டிவி வழியா தினிக்கிது.
Pan India screening பேரில் Netflix போன்ற பகாசுரன்கள் தென்னிந்திய பாலிவுட் நடிகர்களை வைத்து US - UK ல வெற்றி பெற்ற சீரிஸ்களை இந்தியன் வெர்சன்
என்ற பேரில் கல்லா கட்டும் நிலையில் தமிழில் #அயாலி போன்ற மாஸ்டர்பீஸ்கள் வந்து திரையில் சொல்ல முடியாததை எல்லாம் சொல்வது ஆறுதலாக உள்ளது.
The Accidental Farmer ல ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் இருக்கலாம்.
ஆனால் ஏறத்தாழ porn நிலைக்கு சென்று கொண்டிருக்கும் web series களிலும்
இந்த மண்ணுக்கே உரிய அறியாமையை, பாலின சமத்துவத்தை, பெண்கல்வி முன்னேற்றத்தை பேசியபடி தெலுங்கு சக்சஸ் ஃபார்முலா விவசாய பிரச்சினை - அமெரிக்காவுக்கு ஓடிப்போன குழந்தைகள் பேசியதற்கே ஒரு முறை பார்க்கலாம்?
சரி அப்படி என்ன கதை?
மறுபடி முதல் பாராவில் இருந்து படித்து வாருங்கள்

جاري تحميل الاقتراحات...