Mathar_மதார்
Mathar_மதார்

@MalarMathar

7 تغريدة 12 قراءة Mar 12, 2023
How Pump and Dump working.
நீங்க இதுவரை கேள்வி பட்டு இருக்காத ஒரு penny stock முக்கியமாக 90% BSE stock ஆக இருக்கும். ஏதாவது ஒரு யூ ட்யூப் சேனலிலோ, டெலிகிராம் சேனலிலோ இதை வாங்குங்க,Multi bagger னு சொல்லுவாங்க.எந்த ஒரு பங்கை ஒரு பப்ளிக் மீடியாவில் வாங்கச் சொல்றாங்களோ உசார் ஆகணும்
இங்கேதான் Pump and Dump வரும். தினம் அப்பர் சர்க்யூட்டில் இருக்கும். மேலே மேலே போக வைத்து ஆர்வத்தை தூண்டுவாங்க. நடுவில் சில நாட்கள் சர்க்யூட் உடையும் அது புதியவர்களை உள்ளே வர வைப்பாங்க. சில நாட்களிலேயே 200-300% அசால்டாக வரும்.
ஒரு நாள் இந்த பங்கை வைத்திருந்த பெரிய கைகள் லாபத்தில் வித்துட்டு வெளியேறிடுவாங்க. நடுவில் போய் வாங்கின நம்ம தலையில் துண்டு. அன்னைக்கும் சிலர் சர்க்யூட் ஓபன் ஆகிருக்குன்னு வாங்குவாங்க அதுதான் கொடுமை.
அடுத்து என்ன நடக்கும் தொடர்ச்சியான லோயர் சர்க்யூட் . அங்கே வாங்க யாருமே இருக்க மாட்டாங்க. ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிற்கும். உங்களுக்கு இரண்டே சாய்ஸ் தான்
1.நட்டத்தில் வித்துட்டு வெளியேறனும்
2.1-2 வருடங்கள் சுமந்து விற்கலாம்.ஆனா நீங்க வாங்கின விலைக்கு வருமான்னா நிச்சயமில்லை
Beginners Stay away from Parabolic stocks unless otherwise you know the profit booking.
மார்க்கெட்டில் இது முக்கியமாக கடை பிடிக்க வேண்டியது.குறிப்பிட்ட சில நாட்களிலேயே வேகமாக பங்கு மேலேறுவது அல்லது அப்பர் சர்க்யூட் பங்குகள்.
உங்கள் போர்ட்போலியோ ஸ்டாக்ஸ் ஏதாவது ரொம்ப வேகமாக விலை உயர்ந்தால் கவனமா பார்த்து Partial profit or full profit booking பண்ணிருங்க. ஆப்பரேட்டர்கள் உள்ளே வந்திட்டாங்க. இப்படி செய்ற்கையாக அவர்கள் சேனல் மூலம் விலையேற்ற அவர்களுக்கு கணிசமான தொகை தரப்படுகிறது.
எங்கே ப்ராபிட் புக்கிங் செய்வதுன்னு தெரியலை. 100,200% ப்ராபிட் பார்க்கும்போது நல்லாருக்கு. ஆனா உடனே இறங்கிடுது.என்னோட பங்கில் இருந்து எப்ப வெளியேறனும்னு தெரியலைன்னா
இந்த மாச கடைசியில் 25,26 ஆன்லைன் கற்றல் வெபினார் இருக்கு.learn everything with profit booking strategy.

جاري تحميل الاقتراحات...