Mathar_மதார்
Mathar_மதார்

@MalarMathar

15 تغريدة 5 قراءة Mar 12, 2023
சில நாட்கள் முன் இந்த த்ரெட் ஷேர் பண்ணிருந்தேன். தமிழில் வேணும்னு கேட்டவங்களுக்காக... ஆங்கிலம் -தமிழில் விசயத்தை மாற்றி எழுத கஷ்டமாதான் இருக்கு.இருந்தாலும் முயற்சி பண்ணிருக்கேன். ஏதும் தவறு இருந்தால் கமெண்டில் சொல்லுங்க சரி பண்ணிக்கிறேன். 1/
மார்க்கெட்டில் அதிகப்படியான பணம் முதலீடு செய்வது FII எனப்படும் வெளி நாட்டு முதலீட்டாளர்கள்.market movers. தொடர்ச்சியாக சில ஆயிரம் கோடிக்கு வாங்கினாங்கன்னா மார்க்கெட் ஏறும். அதுவே வித்தாங்கன்னா இறங்கும். ஓவரால் செண்டிமெண்ட் இவங்களை வச்சிதான் இருக்கும். 2/
கோடிக்கணக்கான பணம் அவர்களால் முதலீடு செய்யப்படுகிறது. பணம் ஒரு முதலீட்டில்(Asset) இருந்து இன்னொன்றுக்கு நகர்ந்து கொண்டே தான் இருக்கும்.அதிக ரிஸ்க் இல்லாத நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடுகள் நோக்கி Equity,bond,crypto,gold...3/
கோவிட் 2020 பங்குச்சந்தைகள் சரிவில் இருந்தன.க்ரிப்டோ உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க எண்ணி வட்டி விகிதம் 0-0.25% கொண்டு வந்தாங்க.வங்கிகளில் ஜீரோ வட்டிக்கு வாங்கிய பணம் பங்குச்சந்தைக்கு திரும்பியது. மார்க்கெட் மறுபடியும் ஏற ஆரம்பித்தது..4/
It was a mad run" லாக்டவுனில் மார்க்கெட்டுக்குள் புதியவர்கள் நிறைய வந்தாங்க. எல்லா பங்குகளும் விலை ஏற ஆரம்பித்தன. குதிரையோடு சேர்ந்து கழுதையும் ஓடிச்சு. ஏன் இப்படிச் சொல்றேன்னா ஒரு பங்கு விலை ஏற அதற்கான சில தகுதிகள் இருக்கு. ஆனா ஏப்ரல் 2020-மார்ச் 21 வரை அப்படி எதுவும் இல்லை.5/
என்ன வாங்கிருந்தாலும் லட்சாதிபதி.எல்லாம் சுமூகமா போச்சு,எதுவரை? அமெரிக்காவில் வட்டி விகிதம் ஏற்ற ஆரம்பிச்சாங்க.2020ல் குறைக்கப்பட்ட வட்டியால் பணப்புழக்கம் அதிகரித்து பண வீக்க விகிதம் inflation அதிகமாச்சு.மக்களின் கைகளில் புரளும் பணம் குறைக்கப்படணும். அப்பதான் விலைவாசி குறையும்6
சந்தையில் Feb-Apr 2020 வரை 70000 கோடிகள் விற்ற FII மறுபடியும் வாங்க ஆரம்பிச்சாங்க.ஏப்ரல் 2021 முதல் விற்க ஆரம்பிச்சாங்க.இன்னும் வித்துக்கிட்டுதான் இருக்காங்க.
அரசு பத்திரங்கள் yield ஏற ஆரம்பிச்சது.நிலையான வருமானம் வரும் பாண்டுகள் பக்கம் பணம் சந்தையில் இருந்து நகர ஆரம்பிச்சது7
டாலர் -இந்திய ரூபாய் ஏறியதும் காரணம்.1 டாலர் முதலீடு செய்யும் முன் அதை இந்தியப்பணமாக மாற்றும்போது 70 ரூவாய் இருந்து 10% ப்ராபிட் வரும்பொழுது ₹77 வரும்.ஆனா டாலர் ₹80 என்றால் ₹77 டாலருக்கு மாற்றும்பொழுது $0.96 வருது.8/
1 டாலர் முதலீடு செய்து 10% லாபம் வந்தும் கிடைச்சது 1 டாலருக்கும் குறைவு.இதுவரை 3 லட்சம் கோடிகள் FII 2021-2023 வரை வித்திருக்காங்க.
இந்தியாவிலும் இதர நிரந்தர வருவாய் வட்டி விகிதங்கள் ஏறியதும் ஒரு காரணம்.9/
Liquid Funds current YTMs are 6.5 - 7%
-Bank FDs are offering 7 - 8%
-NCD’s are easily offering 8 - 9%
அமெரிக்க 1 வருட பாண்டுகள் வட்டி விகிதம் ஏறின. 10/
வங்கிகளின் வட்டி விகிதம் வீட்டுக்கடன் வட்டியை ஏற்றியது. வீட்டு லோன் வாங்கும் திறன் குறையும்.கார்ப்பரேட் ஏற்கனவே வாங்கிய லோனுக்கான வட்டி அதிகரிக்கும். மேற்கொண்டு லோன் வாங்கினாலும் கூடுதல் வட்டி. திருப்பிச் செலுத்தும் வட்டி அவர்களின் லாபத்தை குறைக்கும்.இது market ku நெகட்டிவ்.11/
புதிய முதலீட்டாளர்கள் கோவிட் காலத்தில் முதலீடு செய்தவர்கள் சந்தையை விட்டு போக ஆரம்பிச்சிட்டாங்க. FII வித்துட்டு இருக்காங்க. 2022 பெரிய அளவில் பங்குச்சந்தை வளர்ச்சி இல்லை.2023 லும் அது தொடர்கிறது. அமெரிக்க பண வீக்க விகிதம் இன்னமும் கட்டுக்குள் வரலை. 12/
இப்போதைக்கு வங்கி டெபாசிட் ,பாண்டுகள் நிலையான வருமானம் தரக்கூடியவையாக இருப்பதால் பணம் பங்குச்சந்தையில் இருந்து அங்கே முதலீட்டுக்கு திருப்பப் படுகிறது. தங்கமும் கணிசமான அளவு விலை உயர்ந்திருக்கு.தங்கம் எப்பொழுதுமே ஒரு ஹெட்ஜிங் அசெட்.ஒன்னு வீழ்ந்தால் ஒன்னு காப்பாத்தும். 13/
முதலீட்டாளர்கள் நாம என்ன செய்வது? நீண்டகால முதலீடு மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு மியூச்சுவல் பண்ட் மற்றும் நேரடிப் பங்குகள் விலை குறைவாக கிடைக்கும் பொழுது ஒவ்வொரு மாதமும் வாங்குங்க. சந்தை இப்படியே தொடர்ந்து இருக்காது. 14/
2008 ல் 2300 ல் இருந்து 2020 கோவிட் முன் 12000 ல் இருந்துச்சு.11 வருடங்களில் 450% வளர்ச்சி.கோவிட் இறக்கம் 7500 ல் இருந்து 19000 வரை சென்றது. 1 வருடத்தில் 150% வளர்ச்சி.5,10 வருட வளர்ச்சியை மனதில் கொண்டு முதலீடு செய்யலாம்.2008,2020 போலவே இந்த தற்காலிக இறக்கமும் கடந்து போகும். 15/

جاري تحميل الاقتراحات...