Why so serious?
Why so serious?

@Piliral

12 تغريدة 127 قراءة Mar 07, 2023
Thread 🧵
இண்டர்வியூவில் நீங்கள் தனித்துவமாகத் தெரிய வேண்டுமா? இண்டர்வியூவின் போக்கை நீங்கள் கைக் கொள்ள முடியுமா?
இதை முயன்று பாருங்கள்👇
பொதுவாக நீங்கள் எதிர்கொள்ளும் முதல் கேள்வி : Tell me about yourself?
இதை பொதுவாக எல்லோரும் ஒரே மாதிரியாக அணுகுவார்கள்.
So many years of Professional experience, Skill Sets, கடைசியாக நீங்கள் வேலை செய்த ப்ராஜக்ட் என பொதுவாக கதையின் போக்கு இப்படி இருக்கும்.
ஒரு நாளைக்கு 3 - 5 இண்டர்வுயூ எடுக்கும் ஒருவருக்கு, தொடர்சியாக ஒரே மாதிரியான flow சலிப்பைக் கூட தரலாம்.
மாறாக நீங்கள் யார் என்ற கேள்விக்கு உங்கள் குணாதிசயங்களை கொண்டு அறிமுகம் செய்து "I am open minded, someone who is versatile, determined, loves learning, creative, Open minded, good team player and enjoy working with others" இப்படியாக மானே தேனே போட்டு சொல்லி கடைசியாக அந்த மாட்டை
கொண்டு வந்து and try to reflect these qualities in my professional life என்று தென்னை மரத்தில் கட்டலாம்.
அடுத்ததாக உங்கள் கேரியரில் செய்த சாதனைகளை(!) வரிசையாக ரமணா கேப்டன் போல Metrics/Numbers ஆல் தெறிக்க விட வேண்டும். தற்போதுள்ள நிறுவனத்திற்கோ/ துறையிலோ செய்த சாதனைக்கு
உங்களின் பங்களிப்பு எவ்வாறு உறுதுணையாக இருந்தது என்று சொல்லிவிட்டு, அடுத்து எப்படியும் கேட்கப் போகும் இரண்டு கேள்விகளுக்கு
1. Why do you leave your current job?
2. Why do you want to apply for this job?
நீங்களே கதையை தொடரலாம்
அதாவது அப்பிடியாப்பட்ட நிறுவனத்தில்
சிறப்பாக செயல்பட்டு வந்தபோதும்
"I am quite happy where I am until I came across this"
அடுத்த கட்ட நகர்வுக்காக/மேலும் சவாலான வேலை தேவை என/பணிச் சூழல் மாற்றம் தேவை என தேடிக் கொண்டு இருந்தபோது இந்த Job posting என்னை மிகவும் ஈர்த்தது.
"This will be a more senior role than my current position / inline with passion and success stories. I do believe I can make a positive impact as my previous roles. இப்படி முடித்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக, கூலாக காட்டிக் கொள்ளா வேண்டும் என்பதால்
So in a nutshell that's who I am professionally. If I am not working, I would like to "Read/write/sing/dance" என நேர்மையான ஹாபிகளை சொல்லவும்.
இந்த frameworkக்குள் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு interesting ஆக எடுத்துக் கொண்டால் பாதி நேரம் நீங்களே பேசிக் கொண்டு
இருக்கும் வாய்ப்பு கிடைக்கும், கேள்விகளை கூடுமானவரை குறைக்கலாம். It will be a clear differentiator.
Do you have any questions for us? கேள்விக்கு முக்கியமாக சம்பளத்தை பற்றி பேசாமல் அந்த Role எதற்காக உருவாக்கப்பட்டது, Team எப்படிப்பட்டது என கேட்கலாம், ஒரு வேளை replacement role ஆக
இருந்தால் ஏன் முன்பு இருந்தவர் வெளியேறினார்? அல்லது Top 3 challenges of the role பற்றி கேட்கலாம். இப்படி கேட்பதின் மூலம் அந்த வேலையில் மீதான உங்கள் அக்கறையை/விருப்பத்தை காட்டுகிறீர்கள்.
அதிகபட்சம் 1 மணி நேரம் எதிரில் உள்ளவர்களை எப்படி கன்வீன்ஸ் செய்கிறீர்கள் என்பதில்தான் வெற்றி.
இப்படியாக செய்து வந்தால் இந்த இண்டர்வியூ மட்டுமல்ல எல்லா இண்டர்வியூவிலுமே நீங்கள் தனித்துவமாக தெரிவீர்கள், வாழ்த்துக்கள்!
...

جاري تحميل الاقتراحات...