𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
கிறிஸ்டி 2023 (மலையாளம்)
மேத்யூ தாமஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆல்பின் ஹென்றி இயக்கத்தில் வெளிவந்த ஒரு ரொமான்டிக் மூவி என்று சொல்லத்தான் ஆசை ஆனால் படம் அப்படி இல்லை.
கதை: +2வில் படிப்பு ஏறாமல் சுற்றி தெரியும் மேத்யூ அதனால் அவனை அவனது குடும்பத்தார்
மாளவிகாவிடம் டியூஷன் வைக்கின்றனர். அவனை விட மூத்த மற்றும் விவாகரத்து பெற்றவள் அவள். அவனுக்கு அவள் மேல் காதல் வருகிறது. அச்சமயத்தில் அவளுக்கு மாலத்தீவில் டீச்சர் வேலை கிடைத்துப் போகிறாள். அவளது தம்பி கல்யாணத்துக்காக கேரளா வந்து மீண்டும் மாநிலத்தில் செல்லும்போது அவருடன் இவன் கூட
செல்ல முற்படுவதே கதை. இயக்குனரின் வாழ்வில் நடந்த கேவலமான துன்பியல் சம்பவத்தை படமாக எடுத்து நாம் துயரப்பட்டது தான் மிச்சம். முதலில் படம் டெத் ஸ்லோ. மாளவிகாவின் குழப்பமான கேரக்டரிசேஷன் இரண்டாம் பாதையை அதலபாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது. அதுவும் அந்த கடைசி முக்கா மணி நேரம்
ஏர்போர்ட் சீன் எல்லாம் ரொம்ப மோசம் அந்த பில்டப்புக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இயக்குனர் அவர் வாழ்வில் நடந்த காதலை எடுக்கிறேன் என்று அவர் அசிங்கப்பட்டது தான் மிச்சம். அவன் முத்தம் தரும்போது ஒரு அடி அடிச்சிருந்தா இந்நேரம் நம்மளாவது தப்பிச்சி இருக்கலாம்.
தவிர்க்க வேண்டிய படம்

جاري تحميل الاقتراحات...