𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة Mar 11, 2023
DEAR VAAPPI (2023)
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மோட்டிவேஷனல் மூவி. லால், அனகா நாராயணன் அப்பா மகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். அப்பா, மகள் அன்பை இப்படத்தில் ரொம்பவே நெருக்கமாக அதே சமயம் வித்தியாசமாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். லால் மும்பையில் டெய்லராக ஒரு கம்பெனியில் வேலை
பார்த்து அவ்வப்போது சொந்த ஊருக்கு வருகிறார். மகள் அமீரா அவர் மீது அன்பு அதிகமாக கொண்டு உள்ளார் எந்த அளவுக்கு என்றால் காலையில் அம்மா அப்பா அறையின் கதவைத் தட்டி அம்மாவை வெளியேற்றிவிட்டு அப்பாவை கட்டிப்பிடித்து தூங்கும் அளவிற்கு...லால் ஒரு சிறந்த டிசைனர் அவர் சொந்தமாக தொழில் தொடங்க
வேண்டும் என்று தனது கனவை மகளுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் நல்லவர்கள் துணையுடன் ஒரு பிராண்டை அமைத்து ஜவுளித் துறையில் பெரிய அளவு சாதிக்க நினைக்கிறார்கள் அப்போது திடீரென்று அப்பா இறந்து போக மகள் அவரின் கடைசி ஆசையை எப்படி பல தடைகளை தாண்டி நிறைவேற்றினார் என்பதை கதை.
படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மெதுவாகவே நகர்கிறது. சுமாரான கதை, திரைக்கதை தான் ஆனாலும் வாழ்க்கையிலோ அல்லது தொழிலிலோ எவ்வளவு கஷ்டங்கள் பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியம் இருந்தால் பல சாதனைகளை செய்யலாம் என்ற ஒரு தன்னம்பிக்கை மெசேஜ்காக படத்தை பொறுமை இருந்தால்
பார்க்கலாம். படம் அடுத்த மாதம் அமேசான் பிரைமில் வெளிவர உள்ளது

جاري تحميل الاقتراحات...