𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 1 قراءة Mar 11, 2023
தங்கம் (மலையாளம்)
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 24 கேரட் மர்டர் இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் மூவி. வினித் ஸ்ரீனிவாசன், பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கதை: இந்தியாவின் தங்க தலைநகரமான திருச்சூரில் நகை பிசினஸ் செய்து கொண்டு இருக்கும் வினித் & பிஜு நல்ல
நண்பர்கள். வியாபார விஷயமாக மும்பை செல்லும் வினித் அங்குள்ள லாட்ஜில் பிணமாக கிடக்கிறார். அதை விசாரிக்க மும்பை போலீஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விசாரணையை தொடங்குகிறது. அவர்கள் எப்படி குற்றப் பின்னணியை வெளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை கதை. படத்தில் வினித் & பிஜு மேனனை விட
மும்பை போலீசாக வரும் பாலிவுட் ஆக்டர் கிரீஷ் குல்கர்னி சூப்பராக நடித்துள்ளார். குற்றத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல மாநிலங்களில் பரவியிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் கடினமான முயற்சியைக் காட்டிய விதத்தில் இயக்குனரை பாராட்டலாம்
படம் மிதமான வேகத்துடன்
சிறிது சஸ்பென்ஸ் உடன் சென்றாலும் இறுதியில் வரும் ஒரு மிக சாதாரண முடிவு நம்மை ஏமாளியாக்குகிறது. மொத்தத்தில் அந்த கிளைமாக்ஸ் ஒட்டுமொத்த படத்தையும் சுமாராக ஆக்கிவிட்டது படம் அமேசான் பிரைமில் உள்ளது தமிழில் இல்லை

جاري تحميل الاقتراحات...