𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

10 تغريدة Mar 11, 2023
ட்விட்டரில் ப்ளூ சப்ஸ்கிரைப்பண்ண போகிறீர்களா?
இதோ சில டிப்ஸ்:-
இப்போது பணம் கட்டினால் யார் வேண்டுமானாலும் ப்ளூடிக் வாங்கலாம். இதனால் என்ன பயன் என்றால்...
1) நீங்கள் போட்ட பதிவு ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்றால் அதை 30 நிமிடங்களுக்குள் 5 முறை எடிட் செய்யும் வசதி முக்கியமானது.
2) Longer Tweets: 280 எழுத்துகளுக்கு மேல் ட்வீட் செய்ய வேண்டுமா? நீங்கள் இந்த வசதி பெற்றால் 4,000 எழுத்துகள் வரை ட்வீட் செய்யலாம்
3) நீங்கள் ட்விட் செய்த பிறகு அது தேவையில்லை என்று நினைத்தால் 60 வினாடிகளுக்குள் UNDO செய்து கொள்ளலாம்.
4) 60 நிமிடம் கொண்ட 1080 HD வீடியோக்களை பதிவிடலாம் (டெக்ஸ்டாப் அல்லது லேப்டாப் மூலம்) (2GP அளவுள்ள வீடியோக்கள் வரை) ஆண்ட்ராய்டு, ஐ போன் மூலமாக பத்து நிமிட HD வீடியோக்களை பதிவேற்றலாம்.
5) பலதரப்பட்டவர்களின் பதிவு BOOKMARK வகைப்படுத்தி தனித்தனியே போல்டர்களில் சேமிக்கலாம்
6) Audio Tap மூலமாக உங்களுக்குப் பிடித்தமான பிராட்காஸ்ட்களை கேட்டு மகிழலாம்
7) நீங்கள் போடும் லைக்ஸ், ரீட்விட் நோட்டிபிகேஷன் மற்றவர்களுக்கு தனியாகத் தெரியும்
நீங்கள் இந்த வசதியை பெற செய்ய வேண்டியது முதலில் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் உடன் போன் நம்பர் மற்றும் ஈமெயிலை
ADD செய்யுங்கள். எக்காலத்தைக் கொண்டும் ப்ளூ சப்ஸ்கிரைப் உங்கள் போனிலிருந்து செய்யாதீர்கள். ஏனென்றால் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டு போனிலிருந்து சப்ஸ்கிரைப் செய்ய மாதத்திற்கு 900 ரூபாய் அதே நீங்கள் டெக்ஸ்டாப் அல்லது லேப்டாப்பில் இருந்து சப்ஸ்கிரைப் செய்தால் 650 ரூபாய் தான்
மேலும் ஒரு வருடத்திற்கு அட்வான்ஸ் ஆக பணம் செலுத்தினால் ஒரு மாதத்திற்கு 566 ரூபாய் மட்டுமே வரும். இந்த பேமெண்ட் நீங்கள் Recurring E-mandate மூலம் தான் செலுத்த வேண்டும் அதாவது மாதம் மாதம் அவர்களே எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் முதலில் ஒரு மாதம் பணம் செலுத்தி சந்தாதாரராகை
கொள்ளுங்கள் ஏனென்றால் உங்களுக்கு இந்த வசதிகள் ஒரு மாதம் பழகிய பின் தேவையில்லை என்றால் அன் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளலாம். சப்ஸ்கிரைப் முடிய இரண்டு நாட்களுக்கு முன்பே அன் சப்ஸ்கிரைப் செய்தால் நல்லது உங்களுக்கு அடுத்த மாதத்திற்கான பணத்தை எடுக்க மாட்டார்கள்.
நீங்கள் பணம் செலுத்திய உடனேயே அந்த வசதிகள் எல்லாம் வந்துவிடும் ஆனால் ப்ளூடிக்ட மட்டும் அவர்கள் உங்கள் அக்கவுண்டை ரிவ்யூ செய்த பிறகு தருவார்கள் அதற்கு 2 லிருந்து 7 நாட்கள் ஆகும். மேலும் நீங்கள் அக்கவுண்ட் ஓப்பன் செய்து 90 நாட்கள் ஆகி இருக்க வேண்டும் 30 நாட்கள் இன்ஆக்டிவாக
இருக்கக் கூடாது. மேலும் உங்களது ப்ரொபைல் போட்டோ ஹேண்டில் நேம் மூன்று நாட்களுக்கு மாற்றக் கொடுக்கக் கூடாது
அப்புறம் என்னங்க விருப்பமுள்ளவர்கள் ப்ளூடிக் சந்தாதாரராக ஆகி சந்துக்குள் கௌரவமாக வலம் வாருங்கள்
முக்கியமான விஷயம். ப்ளூடிக் வந்த பிறகு டிஸ்ப்ளேநேம் அல்லது ப்ரோபைல்பிச்சர் மாற்றினால் அந்த 'டிக்' மறைந்துவிடும். மீண்டும் ரிவ்யூ செய்து சில மணிநேரம் அல்லது ஓரிருநாளில் மீண்டும் தருவார்கள். ஆதலால் சப்ஸ்கிரைப் பண்ணுவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எல்லாவற்றையும் மாற்றி வைத்து விடுங்கள்

جاري تحميل الاقتراحات...