𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 1 قراءة Mar 11, 2023
உண்மைதான் கடன்களில் மோசமானது இந்த வீட்டுக் கடன். 24% வட்டிக்கு பர்சனல் லோன் வாங்கி 5 வருடத்தில் அடைத்து விடலாம். ஆனால் 8.5% வட்டி என்று முதலில் ஆசை காட்டி நம்மை மோசம் செய்து விடுகிறார்கள். 20 வருடம் என்று கூறுவார்கள் ரெப்போ வட்டி விகிதம் வருடத்திற்கு 4 முறை அதிகரிக்கிறது அதனால்
கட்டி முடிக்கும் போது 25 வருடமாகிவிடும். வட்டியும் 11% வந்து விடும். 30 லட்ச ரூபாய் வாங்கினால் நீங்கள் கடைசியாக 80 லட்சம் கட்ட வேண்டி இருக்கும். வேறு வழியில்லை கடன் வாங்கித்தான் வீடு கட்ட வேண்டும் ஆனால் வாங்கும் போது வருடம் கம்மியாக,EMI அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
அதேபோல் வருடத்திற்கு மூன்று இஎம்ஐ எக்ஸ்ட்ராவாக பார்ட் பேமெண்ட் கட்டி அசலில் வர வையுங்கள். இஎம்ஐ கட்டுவதோடு நமது வேலை முடிந்து விட்டது என்று அப்படியே இருக்காமல் வருடத்திற்கு ஒருமுறை ரீபேமெண்ட் ஷெட்யூல் வாங்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அமவுண்ட் தருகிறார்கள் என்று ஏற்கனவே
இருக்கும் லோனை வேறு ஒரு (B.T) பாங்கிற்கு மாற்றாதீர்கள்.
இப்படி செய்வதால் வீட்டுக் கடன் நமது கண்ட்ரோலில் இருக்கும் இல்லையென்றால் நம்மளை முட்டாளாக்கி விடும்
தொடர்ந்து பேசுவோம்....

جاري تحميل الاقتراحات...