அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

8 تغريدة Feb 19, 2023
#ஐஸ்வர்யகணபதி_திருக்கோவில் அவஞ்சா, தெலுங்கானா.
ஐஸ்வர்ய கணபதி என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு பெரிய கிரானைட் கற்பாறை மீது செதுக்கப்பட்ட பாரதத்தின் மிக உயரமான ஒற்றைக்கல் விநாயக மூர்த்தி சிலை தெலுங்கானா மாநிலம் அவஞ்சாவில் அமைந்துள்ளது. இந்த கணநாதரின் உயரம் 30 அடி. இந்த
அரிய ஒற்றைக்கல் சிலை 11வது நூற்றாண்டினது என்று வரலாறு கூறுகிறது. குல்பர்காவினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கிய மன்னர் தைலாம்பு என்பவரால் இந்த சிலை நிறுவப் பட்டது. அவஞ்சா கிராமத்தில் அமைந்திருந்த ஒற்றைப்பாறையை விநாயகரின் அழகிய சிலையாக மாற்ற சிறப்பு சிற்பி ஒருவர்
நியமிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தபோது, அவருக்கு கல்லின் உள்ளிருந்து விநாயகர், நானே சுயம்புவாக வெளிப்படுவேன், இந்த கல்லை செதுக்க வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளது. இதை அடுத்து அந்த சிற்பி வேலையை நிறுத்திவிட்டு மன்னரிடம் நடந்ததை கூறிவிட்டு தனது ஊருக்கு தனது குழுவினருடன்
சென்று விட்டார். (அவர் செதுக்கும் போது இறந்து விட்டார். பாதி செதுக்கிய நிலையில் இவ்விநாயகர் உள்ளார் என்று ஒரு கூற்றும் உள்ளது.) இதையடுத்து அந்தக் கல்லிலிருந்து சுயம்புவாக விநாயகர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தார். இன்றளவும் அந்த விநாயகர் மேலும் மேலும் முழு உருவம் பெறுவதாக
மக்கள் கூறுகிறார்கள். இவருக்கு கோவில் கட்ட உள்ளூர் மக்களும், அந்த கால அரசர்களும் முயன்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் மேற்கூரை இடிந்து விழுந்தது அல்லது எரிந்தது, அதனால் மக்கள் கோவிலோ, மேற்கூரையோ கட்டாமலேயே விட்டுவிட்டனர். இவர் வெயிலில் அமர்ந்து கொண்டும், மழையில் நனைந்து கொண்டும்
இந்த ஊரையும், மக்களையும் காத்து வருவதாக பக்தர்கள் திடமாக நம்புகிறாரரகள். இவரை வேண்டிக் கொண்டால் விவசாயம் செழித்து வியாபாரம் பெருகி, செல்வ வளம் கொழிக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதனாலேயே இவர் ஐஸ்வர்ய கணபதி என்று அழைக்கப் படுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா இங்கு வெகு
விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இது ஆன்மீக பூமி! சித்தர்களும், மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
இந்த அரிய கணபதியைக் காண பக்தர்கள் பாரதத்தின் பல பாகங்களில்
இருந்து வருகிறார்கள். அரசு சரியான பராமரிப்பை இந்த அரிய படைப்பிற்கு தரவில்லை என்பது தெலுங்கானா மக்களின் நெடுநாளைய குறை.
ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

جاري تحميل الاقتراحات...