படித்ததில் பிடித்தது
‘’துணிவு படபாணியில் அதானி நிறுவனத்தின் மோசடி’’ என்பதுதான் இன்றைய ஊடக செய்தியாக வந்திருக்க வேண்டும். படத்தின் ஜீவனே அதுதான். ஆனால் நம்ம மீடியாக்கள் படத்தை வங்கிக்கொள்ளை படமாக பார்த்துவிட்டனர்.
‘’துணிவு படபாணியில் அதானி நிறுவனத்தின் மோசடி’’ என்பதுதான் இன்றைய ஊடக செய்தியாக வந்திருக்க வேண்டும். படத்தின் ஜீவனே அதுதான். ஆனால் நம்ம மீடியாக்கள் படத்தை வங்கிக்கொள்ளை படமாக பார்த்துவிட்டனர்.
அதனால்தான் முந்தநாள் வங்கிக்கொள்ளை பண்ணின ஆளின் செய்தியை துணிவு பார்த்து வங்கியை கொள்ளையடித்தார் என வெளியிட்டனர். அதானியின் ஊழல்தான் இன்று பேசுபொருளாக இருந்திருக்கவேண்டும். ஆகவில்லை! ஏன்?
இரண்டு நாட்களுக்கு முன்பு அதானி நிறுவனம் பற்றி ஒரு செய்தியை ஹின்டன்பெர்க் என்கிற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டது. இரண்டு வருடங்கள் ஆய்வு செய்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த ஆய்வை படிக்கவே ஒருமாசம் ஆகும். புரிந்துகொள்ள இரண்டு மாசம் ஆகும். அந்த அளவுக்கு அடர்த்தியாக விஷயம் இருக்கிறது. அதானி நிறுவனம் எப்படியெல்லாம் பங்குசந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை போலியாக ஏற்றியது, பல்வேறு நாடுகளில் பினாமி பெயரில் நிறுவனங்கள் நடத்தியது,…
இதை வைத்து வங்கிகளில் எப்படி எல்லாம் கடன் பெற்றது என ஏகப்பட்ட ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
அதானியின் சகோதரர் ராஜேஷ் அதானி, அவருடைய மச்சான் சமீர் வோரோ இருவருமாக எப்படி இந்த ஊழலில் பங்களித்தனர் என்று ஏகப்பட்ட கதைகள் வெளிவந்திருக்கிறது!
அதானியின் சகோதரர் ராஜேஷ் அதானி, அவருடைய மச்சான் சமீர் வோரோ இருவருமாக எப்படி இந்த ஊழலில் பங்களித்தனர் என்று ஏகப்பட்ட கதைகள் வெளிவந்திருக்கிறது!
ஆனால் ஊடகங்கள் மௌனம் காக்கின்றன. இதோ எஃபிஓ மூலம் ஆறாயிரம் கோடி நிதி திரட்டுகிறது அதானி நிறுவனம். அதில் எல்ஐசி, எஸ்பிஐ என அரசு நிறுவனங்கள் மக்கள் நிதியை கொட்டத்தயாராகிவிட்டன! அதானி நிறுவனமோ கோர்ட்டில் நாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபித்துவிட்டோம் என்கிறார்கள்.
2 ஜி ஊழல் பற்றி குய்யோ முறையோ என கூக்குரலிட்ட ஊழல் ஒழிப்பு குப்பன்களில் ஒருவர்கூட இதைப்பற்றி ஏன் பேசவில்லை?
ஹின்டன்பெர்க் ஆய்வே அதற்கும் காரணம் சொல்கிறது. ‘’அதானி நிறுவனம் நம் கண் எதிரே பட்டப்பகலில் இத்தனை பெரிய ஊழலை நிகழ்த்துகிறது…
ஹின்டன்பெர்க் ஆய்வே அதற்கும் காரணம் சொல்கிறது. ‘’அதானி நிறுவனம் நம் கண் எதிரே பட்டப்பகலில் இத்தனை பெரிய ஊழலை நிகழ்த்துகிறது…
ஆனால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள் என யாருமே வாயை திறக்கவில்லை ஏன் தெரியுமா, அதானி பற்றிய அச்சம். அதானியால் பழிவாங்கப்படுவோமோ என்கிற அச்சம்!’’
جاري تحميل الاقتراحات...