பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

5 تغريدة Apr 20, 2023
தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. தமிழருக்கு வேறொன்றும் பெருநாள் கிடையாதா, தமிழரைத் தவிர வேறு எவரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லையா என்றால், பால்வாடியில் இருந்து ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது என்று படித்துக் கொண்டே வரும்பொழுது,
என்ன படித்திருக்கின்றாய் என்று கேட்டால் அதிகபட்சப் படிப்பை மட்டுமே நாம் சொல்வோம்.
இனிப்புகளில் எது உனக்கு மிகப் பிடிக்கும் என்று கேட்கும்பொழுது லட்டு என்று சொன்னால் அல்வா பிடிக்காது என்று பொருளில்லை பூந்தி பிடிக்காது என்று பொருளில்லை தலையாய ஒன்றை உயர்த்திச் சொல்லுதல் இயல்புதான்.
அவ்வகையில், தைத்திருநாளை, பொங்கற்பெருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லுதல் பெருமையே.
தமிழர் திருநாள்னு சொன்னாலே இங்கே இருக்க ஒரு இனத்தாருக்கு பகபகன்னு எரியும். உடனே, இது இந்துப் பண்டிகைன்னு கிளப்பி விடுவாய்ங்கை.
இங்கே யாரும் மந்திரம் சொல்லி பொங்கலுக்கு சாமி கும்பிடுறதில்லை.
பொங்கலை வைப்பாங்க, சூரியனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவாங்க. வேண்டியதை அவங்கவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி வேண்டிக்குவாங்க. அவ்வளவுதான். சடங்கு, சாங்கியம், மந்திரம் எதுவும் இல்லை.
அப்டிப் பண்றவங்க யாருன்னா, சனாதன இந்துக்கள்னு தங்களைச் சொல்லிக்கிறவங்கதான். அண்டிப் பிழைக்க வந்துவிட்டு, அத்தனையும் தமதென்பார்.

جاري تحميل الاقتراحات...