கபிலன்
கபிலன்

@_kabilans

5 تغريدة 34 قراءة Jan 09, 2023
தமிழகத்தில் இருந்த ஜாதி கொடுமைகளும் ஏழ்மையும் மக்கள் கூலிகளாக போக காரனமாக இருந்தன சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழை தமிழ் தொழிலாளர்கள் கங்காணிகள் மூலம் சேகரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்த துறைமுகத்திற்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் நடந்து
1/5
வந்து இங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர் அங்கு நூறு பேர் செல்லக் கூடிய படகுகளில் 200 பேராக சென்றனர் தலைமன்னார் கரையில் இறங்கிய பின்னர் அங்குள்ள முகாம் ஒன்றில் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்
2/5
அங்கிருந்து 131 கிலோ மீட்டர் கால்நடையாகவே மாத்தளை வரை அழைத்து வரப்பட்டனர் இவ்வாறு அடர்ந்த காட்டில் பாதைகளற்று மரங்களையும் முட்புதர்களையும் தாண்டி நடந்தனர் போதிய உணவும் தண்ணீரும் மருந்தும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டவர்களை அங்கேயே விட்டு சென்றனர் அவர்கள் தனியே கிடந்து வாடி
3/5
உணவின்றி, நீரின்றி இறந்தனர்
அட்டைக்கடி கொசுக்கடி தேள்கடி பாம்புக்கடியுடன் கொடிய காட்டு விலங்குகளுக்கு இரையாகி காலரா மலேரியா அம்மை போன்ற கொடிய நோய்களால் மடிந்தனர் கொண்டு வரப்பட்ட தமிழ் கூலி தொழிலாளர்களில் பாதி பேர் மடிந்தனர் இதனால் தேவையை விட இருமடங்கு
4/5
எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் இறந்தனர் தோட்ட தொழிலாளர்களாய் இருந்த ஆண்கள் அனைவரையும் கருப்பன் அல்லது ராமசாமி என்றும் பெண்கள் அனைவரையும் மீனாட்சி என்றும் ஆங்கிலேயர்கள் அழைத்தனர் அவர்களுக்கு வேறு பெயர்கள் தெரிந்திருக்கவில்லை
5/5

جاري تحميل الاقتراحات...