1 - இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்று அறிஞர்கள் கணக்கிடுவது 2nd century BCE.
எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்று அறிஞர்கள் கணக்கிடுவது 2nd century BCE.
அன்றைய காலத்தில் பெர்ஷியர்கள் தங்களுக்கு அருகாமையில் இருந்த சிந்து நதிக்கரை ஓரம் இருந்த மக்களை ஹிந்தோஸ் என்று அழைத்தார்கள். அது இன்றைய இந்தியாஅல்ல. பாகிஸ்தான் பகுதிகள் மற்றும் பஞ்சாப் Indus Valley Civilisation. எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இந்தியா என்ற ஒரே தேசமும் இல்லை.
இந்தியா அல்லது இந்து தேசம் என்ற பெயரும் இல்லை.
அடுத்து mesopotamian civilization அதாவது யூதர்கள் இருந்த Tigris–Euphrates நதிக்கரை நாகரீகத்தில், வர்த்தகத்தை பற்றிய குறிப்புகளில் சிந்து சமவெளி மற்றும் அதை ஒட்டிய பெர்சியா எல்லாவற்றையும்
அடுத்து mesopotamian civilization அதாவது யூதர்கள் இருந்த Tigris–Euphrates நதிக்கரை நாகரீகத்தில், வர்த்தகத்தை பற்றிய குறிப்புகளில் சிந்து சமவெளி மற்றும் அதை ஒட்டிய பெர்சியா எல்லாவற்றையும்
Meluḫḫa என்று அழைக்கிறார்கள். சிலர் எத்தியோப்பியா முதல் சிந்து சமவெளி வரையிலுமே Meluḫḫa தான் என்கிறார்கள். சிலர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஒரு வர்த்தக தலைமை இடம் தான் Meluḫḫa என்கிறார்கள் எப்படி பார்த்தாலும் இந்து தேசம் என்னும் சொல் அன்று புழக்கத்தில் இல்லை.
பெர்ஷியர்கள் இன்றைய பாகிஸ்தான் மற்றும் சிந்து ஆற்றை ஒட்டி இருந்த பஞ்சாப் பகுதி வரை ஆண்டார்கள். அதை தாண்டி அவர்கள் வந்தது இல்லை. Ahasuerus என்ற பெயர் வரலாற்றில் இல்லை.
Ahasuerus பற்றிய குறிப்புகளை வைத்து Xerxes I என்னும் பெர்ஷிய மன்னர் தான் Ahasuerus ஆக இருக்க கூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதே போல 127 நாடுகளை பெர்ஷியர்கள் ஆண்டதாகவும் தெரியவில்லை. Xerxes I க்கு எஸ்தர் என்னும் யூத மனைவி இருந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
Darius என்ற பெர்ஷிய மன்னர் சிந்து சமவெளி வரை (Pakistan and parts of Punjab) ஆண்டதாக குறிப்புக்கள் இருக்கின்றன. அவருக்கு பின்னால் வந்த Xerxes I கிரேக்கர்களிடம் தோற்றதாக குறிப்புக்கள் இருக்கின்றது.
அதே போல purim என்னும் யூதர்களின் பண்டிகை எஸ்தர் புத்தகத்தில் தான் ஆரம்பிப்பதாக அதற்கு ஒரு கதையும் சொல்ல படுகிறது. ஆனால் எஸ்தர் புத்தகம் எழுதப்படுவதற்கு முன்பே 2 நூற்றாண்டுகளாக பாபிலோனியர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
Jerome (347-420 CE) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து லத்தீனில் மொழி பெயர்த்தவர். பிறகு இந்த லத்தீனில் இருந்து பைபிள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
இவர் பைபிளை மொழிபெயர்த்த காலத்தில் இந்தியாவில் இருந்து வணிக பொருட்கள் உலகம் முழுவதும் சென்று கொண்டு இருந்தது. உலக மக்களுக்கு அப்போது இந்தியா ஒரு அதிசயமான நாடு அங்கு ஒற்றை கொம்பு குதிரை இருக்காம், தங்கம் ஆறா ஓடுதாம்,
பாம்பு இரத்தின கல்லை கக்குமாம் என்றெல்லாம் கதைகள் நிறைய இருந்தன.
இந்த கதைகளின் தாக்கத்தில் Jerome ஒரு மொழிபெயர்ப்பு தவறு செய்தார்.
யோபு 28:16 - ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
இந்த கதைகளின் தாக்கத்தில் Jerome ஒரு மொழிபெயர்ப்பு தவறு செய்தார்.
யோபு 28:16 - ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
இந்த வசனத்தில் வரும் ஓப்பீரின் தங்கமும் the gold of Ophir (ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு இடம்) என்பதை dyed colors of India என்று மொழி பெயர்த்தார். அப்போது இந்தியாவில் இருந்து சாயமிட்ட துணிகள் உலகமெங்கும் சென்று கொண்டு இருந்தன.
இந்த dyed colors of India க்கு என்ன விளக்கம் என்று பல காலம் கிறிஸ்தவர்கள் யோசித்தார்கள். Gregory the Great என்னும் 7 ஆம் நூற்றாண்டு pope, dyed colors of India என்ற வசனத்திற்கு பொருள் 'brightness of false philosophy' என்றார்.
கருப்பான இந்தியர்கள் கண்ணை கவரும் நிறத்தில் ஆடை அணிவது போல யேசுவிற்கு எதிரான தத்துவங்கள் கவர்ச்சியாக இருக்கும் ஆனால் அவற்றை பின்பற்றினால் இருள் என்பதை போல குன்ஸாக ஒரு விளக்கத்தை சொன்னார்.
அப்படி பட்ட ஒரு மொழிபெயர்ப்பு குழப்பமாக தான் இந்து தேசம் என்ற சொல்லும் இருக்க கூடும்.
அப்படி பட்ட ஒரு மொழிபெயர்ப்பு குழப்பமாக தான் இந்து தேசம் என்ற சொல்லும் இருக்க கூடும்.
جاري تحميل الاقتراحات...