பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

13 تغريدة 2 قراءة Apr 20, 2023
கடவுள் நம்பிக்கை ஆறுதல்படுத்துகிறதா..?
ஒருவர் தன் வண்டி சாவியை தொலைத்து விடுகிறார் உடனே ச்ச கடவுளே இது என்ன தலைவலி என்கிறார்
இன்னொருவர் தன் சேமிப்பு பணத்தை ஒரு சீட்டு கம்பெனியிடம் ஏமாந்து விடுகிறார். இந்த ஏமாற்றத்தை பொருத்து கொள்ள முடியாத அவர் கடவுளே இது நியாயமா..?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, நீதான் அந்த ஏமாற்றுகாரர்களை தண்டிக்க வேண்டும் என்கிறார்
இதுபோன்ற சூழ்நிலைகளில் அதாவது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற சூழ்நிலையில் ஒரு மனிதர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுளிடம் உதவி கேட்டோ அல்லது திட்டியோ ஆறுதல் தேடி கொள்கிறார்
உண்மையில் இந்த செயல் நமக்கு ஆறுதல் கொடுத்து விடுகிறதா?
அது எப்படி கொடுக்கும் நாம் இழந்த பொருளை திரும்ப பெரும் போது தான் ஆறுதல் கிடைக்கும்.
வண்டி சாவியை தேடி கண்டுபிடித்தால் மட்டுமே வண்டியை அங்கிருந்து எடுக்க முடியும் அல்லது வீட்டுக்கு சென்று வீட்டில் இருக்கும் இன்னொரு சாவியை
கொண்டு வந்தால் தான் வண்டியை எடுக்க முடியும் அல்லது வண்டி பூட்டை உடைத்து இழப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்
இந்த சூழ்நிலையில் ஒரு கடவுள் நம்பிக்கையாளர் தான் சாவியை தொலைத்ததற்கு கடவுளை திட்டி பார்க்கிறார் உதவிக்கு அழைத்து பார்க்கிறார் ஒரு வேலை சாவி கிடைத்து விட்டால்
கடவுளுக்கு நன்றிகள் சேரும் கிடைக்காவிட்டால் கடவுளுக்கு வேறு வேலை இல்லையா சாவி , தங்க சங்கிலி என நாம் தொலைத்ததை எல்லாம் கண்டுபிடித்து கொடுப்பது தான் வேலையா என்ற காரணம் கிடைக்கும்.
இதே சூழ்நிலையில் ஒரு கடவுள் மறுப்பாளர் இருந்தால் அவர் இல்லாத கடவுளை துணைக்கு அழைக்கவோ
திட்டி தீர்க்கவோ முடியாது அவர் தன்னை ஆறுதல்படுத்தி கொள்ள இருக்கும் ஒரே வழி தொலைந்த பொருளை எப்படியாவது கண்டுபிடிப்பது தான் ஒரு வேலை முடியாவிட்டால் நாம் எப்படி அதை தொலைத்தோம் என்பதை திரும்ப திரும்ப சிந்தித்து பார்த்து தவறை கண்டுபிடித்து இனி அது நடக்காமல் இருக்க முயற்சி எடுப்பது
மட்டுமே அவரை ஆறுதல்படுத்தும்
இதுபோன்ற சிறு இழப்புகளாக இருக்கட்டும் அல்லது சீட்டு கம்பெனியிடம் ஏமாந்து போவதோ அல்லது நமக்கு வேண்டியவர்களை இழக்கும் போதும் கூட கடவுள் நம்பிக்கை ஆறுதல்படுத்த
ுவது கிடையாது மாறாக நம் கேள்விகளை தடுக்கவே செய்கிறது
நமக்கு ஏற்படும் பெரிய இழப்பு உத: நமக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிடுகிறார் அல்லது ஜாதி ஆணவ கொலையில் கொள்ளப்படுகிறார் இந்த இழப்பை ஒரு கடவுள் நம்பிக்கையாளர் சந்திக்கும் போது கடவுளே இது நியாயமா என கேள்வி கேட்கிறார் இல்லாத கடவுளை நோக்கி கேட்கும் இந்த கேள்வியை
கூட பொறுத்து கொள்ள முடியாத மதங்கள் இதற்கு காரணம் விதி அவர் தலை எழுத்து , கடவுள் அனைத்தையும் அறிந்தவன், அவனே நல்லதையும் கெட்டதையும் கொடுக்கிறான் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என பல பல காரணங்களை அடுக்கி வைத்துள்ளது இதில் ஏதோ ஒரு காரணத்தை எடுத்துக் கொண்டு இவரும் தன்னை
ஆறுதல்படுத்தி கொள்கிறார் இந்த ஆறுதல் ஒருவரின் உணர்வு பூர்வமான வலிகளை தீர்க்க போவதில்லை மாறாக போராட்ட குணத்தை கேள்வி கேட்கும் திறனை ஒழித்துக் கட்டி விடுகிறது
இதே இழப்புகளை ஒரு கடவுள் மறுப்பாளர் சந்திக்கும் போது விபத்து நடந்ததற்கான காரணத்தை தேடுகிறார் ஆறுதலை அல்ல.
குண்டும் குழியுமான சாலை தான் விபத்துக்கு காரணம் கையாலாகாத அரசாங்கம் தான் அனைத்திற்கும் காரணம் என போராட்டத்தை கையில் எடுக்கிறார்
ஜாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக தூண்டப்படுகிறார் ஜாதியை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைகிறார்
உணர்வு பூர்வமான வலிகளுக்கு காலத்தை தவிர எதுவும் ஆறுதலை கொடுக்க முடியாது என்பதே எதார்த்தம். நம் தவறுகளை திரித்து கொள்ளவும், கேள்வி கேட்கவும் போராட்டத்தை கையில் எடுப்பதையும் தடுக்க மட்டுமே கடவுள் நம்பிக்கை உதவுகிறது
மரணம் என்பது இயற்கையின் விளைவு என்பதை உள்வாங்கி கொண்ட ஒரு நாத்திகர் ஒரு கடவுள் நம்பிக்கையாளரை விட வேகமாக தன்னை ஆறுதல்படுத்தி கொள்ள முடியும் ஆனால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இயற்கையானதா இல்லையா? என்பதே கேள்வி

جاري تحميل الاقتراحات...