Mathar_மதார்
Mathar_மதார்

@MalarMathar

13 تغريدة 53 قراءة Dec 25, 2022
குழந்தைகளின் எழுத்து ,வாசிப்பு பயிற்சியை எப்படி செய்வது? தொடர்வது? மொபைல்,டிவி பார்க்கும் நேரத்தைஎப்படி குறைப்பது?
என் பையனுக்கு 3 வயது முதல் நான் செய்தவை வாங்கிய புத்தகங்கள் பற்றி மட்டுமே இந்த 🧵.
1/ பிரிக்க முடியாதது குழந்தைகளையும் செல்போன்களையும்தான்.அந்த செல்போனையே எப்படி அவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றலாம்? Learning games போட்டாலே நிறைய ஆப் வரும்.colors,shapes,buzzles, fruits and vegetables,ABC, Numbers சுலபமா கற்றுக்கொள்ள முடியும். 3 வயதில் ஆரம்பிக்கலாம்.1 மணி நேரம்
2/ 3 வயதில் பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்கு போய்டுவாங்க. எண், எழுத்துக்கள் எழுத பயிற்சி குடுக்கணும்.எழுத்துக்கள் மேலேயே விரல் வைத்து எழுத பழக்கணும்.அவர்களை ஈர்க்கும் வகையில்தான் வடிவமைச்சிருப்பாங்க. குழந்தைகள் ஜாலியா எழுதுவாங்க.தமிழ்,ஆங்கிலம்,இந்தி,எண் அனைத்தும் பழகிக்கலாம்.
3/முழு நேரமும் படிப்பதிலேயே கொண்டு போக முடியாது. அவர்களின் யோசிக்கும் திறனை ஊக்குவிக்க buzzles உதவும். 3/4 வகை டவுண்லோட் செய்து வச்சிட்டா போரடிக்காமல் விளையாடுவாங்க.
4/இந்த மாதிரி பாக்கெட் சைஸ் புத்தகங்கள் தமிழ் ,ஆங்கிலம் இரண்டிலும் கிடைக்கும். க்வாலிட்டி தரமாக இருக்கும். தினம் அவர்களோடு அமர்ந்து கொஞ்ச நேரம் இவற்றை புரட்டி சொல்லிக்குடுக்கலாம்.
5/ 1000 வார்த்தைகள் படங்களுடன் இருக்கும். என் பையன் 3 வயதில் இந்த புத்தகம் முழுவதும் வாசித்து முடித்தான்.அவனோட பேவரிட் புத்தகம். Little Genius series புத்தகங்கள் எல்லாமே நல்லா இருக்கும்.Activity pack 4 வயது முதலே செய்யக்கூடிய வகையில் இருக்கும்.
6/ஓரளவு ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த பின் 101 பஞ்ச தந்திர கதைகள் வாங்கலாம்.கலர் படங்களுடன் தரமான புத்தகம்.கோவிட் லாக்டவுனில் 4 வயதில் அவனை வாசிக்க வைத்து கதை சொல்லுவேன்.வாசிக்கும் திறன் மேம்பட்டது. ஆங்கில வார்த்தைகளின் அர்த்தமும் புரிய ஆரம்பிக்கும்.
7/ 6-7 வயதில் இந்த புத்தகங்கள் நல்லாருக்கும். ஆங்கில வார்த்தைகள் அவங்களே கண்டுபிடிப்பாங்க. 505 நல்ல டைம் பாஸ் புத்தகம் .
8/ டிவி பார்க்கும் நேரத்தை குறைக்க இவை உதவும். 7 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பெரியவர்கள் கூட அமர்ந்து லாஜிக் சொல்லி குடுக்கணும். விடைகள் கடைசி பக்கத்தில் உள்ளன.
8/ பெரியவர்களுக்கும் ஏற்ற புத்தகம். Grammer , ஆங்கில வாக்கியங்கள் சுலபமாக பேச முடியும். 6/7 வயது குழந்தைகள் படிக்கலாம்.
9/ சின்ன சின்ன கணக்குகள் இருக்கும். என்னதான் 4 கோடு நோட்டில் எழுத வச்சாலும் எழுத்து சரியா வர மாட்டேங்குது. எழுத்து மேலேயே எழுதும்படி புத்தகம் இருக்கும். கூடவே பயிற்சி பக்கங்களும். இந்த பயிற்சி இப்ப நடந்துகிட்டு இருக்கு.எழுத்து நல்லாவே இம்ப்ரூவ் ஆகிருக்கு.
10/ இவை போக பெட் டைம் ஸ்டோரி புத்தகங்களும் இருக்கு. பகலில் படித்து வைத்துக்கொண்டால் இரவில் தினம் ஒரு கதை சொல்லி தூங்க வைக்க முடியும். தினம் 1-2 மணி நேர பயிற்சி போதும். கோவிட் லாக்டவுணில் இந்த புத்தகங்கள் தான் எம்பையனுக்கு பள்ளியை மிஸ் செய்யாமல் இருக்க வைத்தவை.
இவையெல்லாமே நான் அமேசானில் என் பையனுக்கு வாங்கிய புத்தகங்கள். தற்பொழுது 2 ம் வகுப்பு.பஞ்ச தந்திர கதைகள் அவனே வாசித்து கதையும் தமிழில் அழகா சொல்லுவான்.அவன் ஆங்கில அறிவு ஆசிரியர்கள் மிரண்டு போகும் வகையில் இருக்கும்.என்ன பயிற்சி குடுக்குறீங்கன்னு கேட்பாங்க.

جاري تحميل الاقتراحات...