𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 350 قراءة Mar 11, 2023
கொல்லிமலையில் ஒருவர் தங்க ஒரு நாளைக்கு Rs.300 மட்டுமே!!?
கொல்லிமலைக்கு, 300 அடி உயரத்திலிருந்து பாயும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் காண வேண்டிய இடம் #கொல்லிமலை
கொல்லிமலை சுற்றி 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன அதில் ஒருவர் தங்க மிகவும் குறைந்த வாடகை 100 ரூபாய். அரசாங்க யூத் ஹாஸ்டல் உள்ளது ஆனால் அங்கு தரையில் தான் படுக்க வேண்டும். ஆனால் இங்கு ஒருவர் தங்குவதற்கு படுக்கையுடன் கூடிய தனி அறை வாடகை ரூபாய் 300 தான். இது நாம் மலையேறி
உச்சியை அடைந்தவுடன் செம்மேடு என்ற இடத்தில் உள்ளது. நீங்கள் இருவர் என்றால் 750 ரூபாய் (டபுள் பெட்ரூம்) 1 முதல் 50 பேர் வரை தங்கும் வசதி இங்கு உண்டு. நன்கு பறந்து விரிந்து மிளகு காட்டுக்குள் இருக்கும் இந்த ரிசார்ட் மனதிற்கு மிகவும் அமைதியை தருகிறது. இங்கேயே உணவகம் உண்டு.
இங்கு நீங்கள் சனி ஞாயிற்றுக்கிழமை வருவதாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை ஹெட் ஆபீஸ் நம்பரில் புக் செய்துவிட்டு வந்தால் நல்லது வார நாட்களில் இங்கு நேரடியாக வந்து புக் செய்து கொள்ளலாம். குறைந்த விலையில் எந்தக் குறையும் இல்லாமல் இங்கு தங்கலாம்

جاري تحميل الاقتراحات...