𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 5 قراءة Mar 11, 2023
சிவகாசி நாடார் மெஸ், சங்கரன்கோவில்
தமிழ்நாட்டில் தனித்துவமான பிரியாணி ருசிகளில் இந்த சங்கரன்கோவில் சிவகாசி நாடார் மெஸ் பிரியாணி தவிர்க்க முடியாது, காரணம் தக்காளி சேர்க்காமல், இவர்களால் பிரத்யமாக அரைக்கப்பட்ட பிரியாணி மசாலாவினால் செய்யப்படுவது தான் அதன் தனி ருசிக்கு காரணம்.
இந்தக் கடை 1942-ல் ஆரம்பிக்கப்பட்டு 80 ஆண்டுகள் சுவை மாறாமல் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு பிரியாணிக்கு அடுத்து மிகவும் பிரபலமானது நெய் மட்டன்சுக்கா, மூளை ரோஸ்ட், நாட்டுக்கோழி ஷாப்ஸ், கல்ப் சிக்கன், மீன் ரோஸ்ட்
இங்கு ஸ்பெஷலாக தயிர் ஊற்றி அதில் தேனூற்றி பிசைந்து சாப்பிட சொல்கிறார்கள் டேஸ்ட் பிரமாதம். அடுத்த முறை குற்றாலம் செல்லும் போது சங்கரன் கோயில் வழியாக சென்று இந்தக் கடையில் ருசி பாருங்கள் குற்றாலத்தில் இருந்து வரும் போதும் மீண்டும் இந்த கடைக்கு செல்வீர்கள்
Details :-
Sivakasi Nadar Mess
13,Angoor Vinayagar kovil Street, SH 41, Sankarankoil
Phone : +919842122998
Direction : goo.gl

جاري تحميل الاقتراحات...