𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

8 تغريدة Mar 11, 2023
மீசைபுலிமலை
(கம்ப்ளீட் கைடு)
நான்கு வருடங்களுக்கு மேலாக பூட்டிக் கிடந்த சொர்க்கவாசல் இப்போது திறந்து உள்ளது. கண்களுடன் பிறந்த இந்த பிறவியின் அற்புதப்பலனை நாம் அடைவதற்கான அழகான காட்சிகள் கொட்டிக் கிடக்கும் இடம் தான் மீசைபுலிமலை. சில வருடங்களாக யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு
இருந்த இந்த இடம் இப்போது கேரள வனத்துறையின் அனுமதி உடன் செல்லலாம். இது கேரளாவிலேயே அதிக உயரத்தில் (8661அடி) இருக்கும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட். மேற்குத் தொடர்ச்சி மலையின் 3வது மிக உயரமான சிகரம். எட்டு மலை சிகரங்கள் ஒரு மீசையைப் போல் பரவி அமைந்துள்ளதிலிருந்து இந்த பெயர் பிறந்துள்ளது.
கேரள, தமிழக மலையேற்ற வீரர்களின் லட்சிய பூமி என்று சொல்லப்படும் இங்கு செல்ல உங்களை முதலில் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்வது நல்லது. போவதற்கு 10 நாட்களுக்கு வாக்கிங், ஜாக்கிங் சென்று பழகிக் கொள்ளுங்கள். இந்த சிகரம் மூணாறில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மூணாறில் இருந்து
சைலண்ட் வேலி போகும் வழியில் உள்ள KFDC அலுவலகம் உள்ளது அங்கு அவர்கள் இரண்டு விதமான பேக்கேஜஸ் தருகிறார்கள்.
1. ரோடோ மேன்ஷன்
2. மீசைபுலிமலா பேஸ் டென்ட் கேம்ப்
ரோடோ மேன்ஷன்:-
இது 8000அடி உயரத்தில் உள்ளது. இங்கு தங்குவதற்கு நல்ல அறைகள், சாப்பாடு உண்டு. இங்கு தங்க இருவருக்கு 6600
(including dinner breakfast lunch) இங்கிருந்து 700 அடி உயரம் ட்ரக்கிங் செய்தால் போதும் மீசைபுலிமலை வியூ பாயிண்ட் சென்றுவிடலாம். காலை 6 மணிக்கு கிளம்பினால் சன்ரைஸ் பார்த்து விடலாம்.
மீசைபுலிமலா பேஸ் டென்ட் கேம்ப்:-
இது 6000 அடி உயரத்திலேயே உள்ளது. இங்கு டென்ட் ஸ்டை மட்டுமே.
இங்கு தங்க ஒருவராக இருந்தாலும் இருவராக இருந்தாலும் 4400 சாப்பாடு உட்பட. ஆனால் இங்கிருந்து மீசைமலை வியூபாய்ண்டிற்கு 2700 அடி ட்ரக்கிங் செய்ய வேண்டும். காலையில் 4:30 மணிக்கு கிளம்பினால் தான் சன்ரைஸ் பாயிண்டிற்கு அடைய முடியும்.
மீசைபுலிமலை வியூ பாயிண்ட் இல் இருந்து நீங்கள்
கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை Tea எஸ்டேட் காணலாம்.உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வரையாடுகளை காணலாம், யானைகளையும் பார்க்கலாம்
வாழ்க்கையில் ஒரு முறையேனும் காண வேண்டிய இடம் இந்த மீசைபுலிமலை.
குறிப்பு: குளிர் ஜாக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். மது அனுமதி கிடையாது.
உங்களது
உங்களது சொந்த வாகனத்தில் செல்லலாம் ஆனால் அது அட்வைஸ் இல்லை. கண்டிப்பாக கார் டேமேஜ் ஆகிவிடும் அதற்கான செலவு இருபதாயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை ஆகும் KFDC அலுவலகத்தில் இருந்து ஜீப் கிடைக்கும் 3000 லிருந்து 3500 வரை வாடகை. மற்ற சுற்றுலா பயணிகளுடன் பகிர்ந்து சென்றால் பண மிச்சம்.

جاري تحميل الاقتراحات...