𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
KOOMAN 2022 மலையாளம்.
ஒரே படத்தில் இரண்டு விதமான த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்க "த்ரிஷ்யம்" புகழ் ஜித்துஜோசப்பாலே தான் முடியும். திருடன் போலீஸ் படம் பார்த்திருப்போம் இது போலீஸ் திருடனின் கதை. முதல் பாதையில் ஜித்துவின் ஸ்டைலில் படம் ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதையில் வேறு ஒரு
கோணத்தில் முடிகிறது.
கதை: தமிழ்நாடு கேரளா பார்டரில் நெடும்பாறை என்னும் ஊரில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கிறார் ஆசிப். புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் அவரை பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் அவரைப் பழிவாங்க இரவில் பல வீடுகளில் திருடுகிறார். அதேசமயம் அந்த ஊரிலும்
தமிழ்நாட்டிலும் நிறைய தற்கொலைகள் ஒரே மாதிரி நிகழ்கின்றன.
அது தற்கொலை அல்ல கொலைகள் என்று நிரூபிக்க ஹீரோ களமிறங்குவதே மீதிக்கதை. படத்திற்கு முக்கியமான பலம் ஆசிப்அலியின் நடிப்பு. கடைசியில் கொலையாளி யார் என்பது யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஜித்துஜோசப்.
படம் அமேசான் பிரைமில் உள்ளது. தமிழில் இல்லை. திரில்லர் பட ரசிகர்கள் தவறவிட கூடாத படம்

جاري تحميل الاقتراحات...