பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

6 تغريدة 2 قراءة Nov 29, 2022
கடவுள் இருக்கின்றார் என்கிறீர்கள்.
கடவுளின் இருப்பிற்கு சான்று கேட்டால், காற்று கண்ணுக்குத் தெரியுமா, மின்சாரம் கண்ணுக்குத் தெரியுமா..? ஆனால், அவற்றின் பயன்களை உணர முடிகின்றது அல்லவா..? அது போலத்தான் கடவுளும் என்கிற வறட்டு வாதத்தை முன்வைக்கின்றீர்கள்.
காற்றின் விளைவையும், மின்சாரத்தின் விளைவையும் அவற்றால்தான் விளைகின்றது என்று பல்வேறு சோதனைகளை, பலநிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், எவர் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து பார்த்து உணரலாம்.
அப்படி ஏதேனும் ஒரு முறையில் கடவுளை உணரமுடியுமா..?
உங்கள் கடவுளை அற்ப பொருட்களோடு ஒப்பிட்டு, உங்கள் அரைகுறைப் புரிதல்களை வெளிப்படுத்தி, கடவுளைச் சிறுமைப்படுத்தாதீர்கள்.
உயிர் இருப்பதை எப்படி நம்புகின்றீர்கள் என்றும் கேட்கின்றீர்கள்..? நீங்கள் படித்தவர்கள்தானே..? உயிரின் பண்புகள் தெரியும்தானே..?
சரி, உயிர் இருப்பதை நம்பினால், கடவுள் இருப்பதையும் நம்ப வேண்டும் என்று எதை வைத்துச் சொல்கின்றீர்கள்..?
இன்னும் ஒருபடி மேலே போய், உங்களால் ஒரு உயிரைப் படைக்க முடியுமா..? பிரபஞ்சத்தைப் படைக்க முடியுமா என்று அறைகூவல் விடுகின்றீர்கள். இப்பொழுது பிரச்சனை கடவுளோடு போட்டியா என்ன..?
கடவுளின் இருப்பை நீங்கள் எப்படி உறுதி செய்யப் போகின்றீர்கள் என்பதுதானே?
கடவுட்தன்மைகளாக நீங்கள் குறிப்பிடுவன ஒன்று அபத்தமாக இருக்கின்றன அல்லது அவைகள் மனிதச் செயல்களாகவோ இயற்கை நிகழ்வுகளாகவோ இருக்கின்றன அப்படி எனில் கடவுள் என்ற ஒன்று இன்னும் அறியப்படவில்லை என்பதாகத்தானே ஆகின்றது?
உயிரையோ, பிரபஞ்சத்தையோ நம்மால் படைக்க முடியாது என்பது கடவுளின் இருப்பிற்குச் சான்று இல்லை. கடவுள்தான் அவற்றைப் படைத்தார் என்று எவரேனும் நமக்கு நிரூபிக்கும் வரையில்.

جاري تحميل الاقتراحات...