𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة 5 قراءة Mar 11, 2023
ELA VEEZHA POONCHIRA (மலையாளம்)
JOSEPH, NAYATTU படங்களை எழுதிய ஷாஹிகபீர் இயக்கிய முதல் படம். இதில் சௌபின் ஷாஹிர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஒரு வித்தியாசமான லொகேஷன்ல் பின்னப்பட்ட ஒரு கிரைம் திரில்லர் மூவி. Ela Veezha Poonchira (இலை விழா பூக்குளம்) என்பது கோட்டையம்
மாவட்டத்தில் ஒரு மலைப்பிரதேசம் கேரளாவிலேயே அதிகம் மின்னல் தாக்கக்கூடிய இடம். அதேசமயம் உயரமான இடம் என்பதால் அங்கு தான் வயர்லெஸ் ஸ்டேஷன் உள்ளது. அதன் மூலமாகத்தான் மூன்று மாவட்ட காவல் துறையின் வயர்லெஸ் போன் வேலை செய்கிறது அந்த இடத்தை பாதுகாக்கவும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை
மின்னலிலிருந்து காப்பாற்றவும் அங்கு ஒரு ஸ்டேஷன் இருக்கிறது அதை பாதுகாப்பதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஷோபின் டூட்டிக்கு திரும்ப ஜாயின் பண்ற அன்றைய தினத்திலிருந்து பதட்டமாகவே இருக்கிறார். அப்போது அந்த மலைப்பகுதியை சுற்றி பெண்ணின் உடல் பாகங்கள் அங்கங்கு
கிடைக்கின்றன. அதை பற்றி காவல்துறையை விசாரிக்க களம் இறங்குகிறது பின்னர் நடப்பதை விறுவிறுப்பாக கூறியிருக்கிறார் இயக்குனர். படம் ஒன்னே முக்கால் மணி நேரம்தான். அந்த இடம் உண்மையாகவே உள்ளது ( en.wikipedia.org )
நம்மளை அங்கே கூட்டி சென்ற மாதிரி இருந்தது மனேஷ் சினிமோட்டாகிராபி.
படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாகவே சென்றாலும் கிளைமாக்ஸ் சூப்பரா இருந்துச்சு படம் கண்டிப்பாக பார்க்கலாம்.
இப்படம் விரைவில் ஜியோ சினிமா OTT தளத்தில் வரவிருக்கிறது

جاري تحميل الاقتراحات...