கபிலன்
கபிலன்

@_kabilans

6 تغريدة 110 قراءة Oct 10, 2022
பகலில் பூசை நேரங்களில் இறைவனுக்கு முன் இவர்கள் நாட்டியமாடுவார்கள் இரவிலோ வசதி படைத்தவர்களின் விளையாட்டு பொம்மைகள் இவர்கள் இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் ஆனால் தந்தை யாரென்று தாய்க்கு கூட தெரியாது இறைவனின் குழந்தைகள்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகப் பிறந்தால், 1/1
அவர்களும் தாயின் வழியில்தான் வாழ்ந்தாக வேண்டும் இவர்கள் தான் தேவதாசிகள் இறைவனின் பெயரால் இந்த இழிவு நடந்தது இந்த இழிவு கோழி ஆடு மாடுகளை போல் பெண்கள் நேர்ந்துவிடப்படார்கள் செல்வந்தர்களின் போக பொருளாய் மாறி இவர்கள் தவித்த தவிப்பும் அனுபவித்த கொடுமையும் கொஞ்ச நஞ்சமல்ல 1/2
இதை ஒழிக்க சென்னை மாகாண சட்டசபையின் மேலவை துணை தலைவரான Dr. முத்துலட்சுமி அம்மையார் 1927 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள், தேவதாசி முறை ஒழிப்பிற்கான தீர்மாணத்தை முன் மொழிந்தார் பலர் கொதித்து எழுந்தனர் நாட்டிய கலையே அழிந்து போகும் அபாயம் வந்து விட்டது கலை காப்பாற்றப்பட வேண்டாமா? 1/3
இந்த அநீதியை தடுப்பார் யாருமில்லையா? இறைவன் முன் நடைபெறும் நாட்டியம் நின்றால், இறைவன் தன் நெற்றி கண்ணை திறந்துவிட மாட்டானா? என்று பிதற்றினர் பெண்களை இழிவு படுத்தித்தான் அவர்களின் பெண்மையைச் சுறையாடித்தான் பரத நாட்டிய கலையை வளர்க்க வேண்டும் என்றால் காப்பாற்ற வேண்டும் என்றால் 1/4
அந்தக் கலையே தேவையில்லை என முழங்கினார் Dr. முத்துலட்சுமி அம்மையார் பெரியாரோ பொங்கி எழுந்தார் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை எதிர்ப்போரை பார்த்து சவால் விட்டார், தேவதாசி முறை தொடர வேண்டும் என்று, கொந்தளிக்கிறீர்களே உங்கள் வீட்டுப் பெண்களை பொட்டு கட்டி அனுப்ப தயாரா? என்றார் பெரியார் 1/5
1/6 ஒரு நாளா, இரண்டு நாளா, இருபது ஆண்டுகால போராட்டம் அம்மையாரின் போராட்டம் அயரா உழைப்பு தளராத போராட்டம் இறுதியில் வெற்றி பெற்று விட்டது 1947 ஆம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது அதை சாதித்து காட்டியவர் Dr. முத்துலட்சுமி அம்மையார்

جاري تحميل الاقتراحات...