𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة Mar 11, 2023
ராமவிலாஸ்
தங்கள் முன்னோர்களால் நடத்தப்பட்ட உணவகங்கள் அதன் தன்மை மாறாமல் உணவிலும், தரத்திலும், அமைப்பிலும் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் இன்றும் செயல்படுகின்றது. முக்கியமாக காலத்துக்கு ஏற்ற மாற்றம் எனும் பெயரில் உணவு முறையில் மாற்றம் செய்யாததே இவ்வவகை உணவகங்களின் சிறப்பு...
அப்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் நாராயணபாளையம் என்னும் கிராமத்தில் 70வருடங்களுக்கு மேலாக செயல்படும் அசைவ உணவகம்தான் ராம விலாஸ். இங்கே ஸ்பெஷலே அதிக உணவு ஐட்டங்கள் கிடையாது காலையில் இட்லி மட்டும் தான் அதற்கு சைடிஷ்ஷாக மட்டன், சிக்கன்
குடல் கறி மட்டும் உண்டு அதே போல் மதியம் சாதம், மட்டன் தண்ணி குழம்பு சிக்கன், மட்டன் சுக்கா குடல்கறி மட்டும்.
இங்கு செய்யப்படும் இட்லிக்கு உளுந்து சேர்ப்பது கிடையாது வெந்தயத்தை அளவாக சேர்த்து இட்லி செய்து தருகிறார்கள் அதேபோல் எந்த குழம்பு, மட்டன் சிக்கன் உணவுகளில் மிளகாய் தூள்
சேர்ப்பது கிடையாது அனைத்தும் மிளகு மட்டுமே சேர்த்து செய்வதால் ருசி அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. சேலம், திருச்சி, கோயம்புத்தூரிலிருந்து எல்லாம் இங்கு வந்து ரெகுலராக சாப்பிடும் கஸ்டமர்கள் உண்டு. அடுத்தமுறை இந்த வழியாக பயணம் செல்ல நேரிட்டால் கண்டிப்பாக குறித்து வைத்து
இங்கு சாப்பிட்டுப் பாருங்கள் ஒரு வித்தியாசமான சாப்பிடும் அனுபவம் கிட்டும்
லொகேஷன்:
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...