𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة 1 قراءة Mar 11, 2023
டூம் கிளாம்ப்
சுற்றுலா எப்பயாவது செல்கிறோம் அப்படி செல்லும்போது சிமெண்ட் சுவர்களுக்குள் தங்குவதை விட இதுபோல வித்தியாசமான முறையில் தங்கும் அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
அது என்ன கிளாம்ப்? டெண்ட் கேம்பிங் கேள்விபட்டிருப்பீர்கள். அதையே நிறைய வசதிகளுடன்
கூடிய தங்குமிடமாக கிளாமர்+ கேம்பிங்கை தான் அவ்வாறு கூறுகிறார்கள்.
(The word is a mixture of 'glamorous' and 'camping') இது இப்போது தென்னிந்தியாவில் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் அருகில் அமைத்துள்ளார்கள். பூம்பாறை to மன்னவனூர் ரோட்டில் செல்லக்கூடாது பூம்பாறை கிராமத்தில் உள்ள
கோவில் வழியாக செல்ல வேண்டும். இந்த இடத்திலிருந்து நல்ல வியூபாயிண்ட் உண்டு. காலையில் எழுந்தவுடன் அருவியின் ஓசை மற்றும் காட்சிகளை காணலாம்.
தழுவிச் செல்லும் மிஸ்ட் அழுகாமல் இருக்கும் உங்களுக்கு. காலை உணவு இலவசம்தான். இங்கு வழக்கம்போல் உடமைகளை வைத்துவிட்டு வெளியே சுற்றிப் பார்த்து
விட்டு வரலாம் என்று நினைத்து போக வேண்டாம். ஏனென்றால் இந்த இடமே ஒரு சுற்றுலாத்தலம் போல்தான். அதை விட இங்கு செக்கின் டைம் மதியம் 3 மணி செக்கப் அடுத்த நாள் காலை 11.
இங்கு கிளாசிக், பொஹிமியன், நாதுரா, மொராக்கோ கிளாம்ப் என்று பல வகையான தங்கும் டூம் கிளாம்ப் உண்டு.
கட்டணம் ஒரு நாளைக்கு 10,000 முதல் 15,000 வரை பிளஸ் ஜிஎஸ்டி. குடும்பத்தாரின் அளவில்லாத மகிழ்ச்சிக்கு இந்த கட்டணம் ஒரு பொருட்டல்ல என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இங்கு சென்று தங்கி மகிழ்ந்து வரலாம்
டீடெயில்ஸ்:-
LuxeGlamp,
Poombarai, Kodaikanal
Map Link : goo.gl

جاري تحميل الاقتراحات...