Sen Balan
Sen Balan

@senbalan

11 تغريدة 22 قراءة Aug 29, 2022
100 ஆண்டுகளுக்கு முந்தைய சூழல் ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரே ஒரு தொழிற்சாலை. அதைத்தவிர அந்த கிராமத்திற்கு வேறு வேலைவாய்ப்புகளே இல்லை. கடும்வறட்சி பூமி, அதனால் விவசாயமும் கிடையாது. கிராம மக்களோ மூடநம்பிக்கை மிகுந்தவர்கள்.(1/n)
அந்த ஊரை விட்டு வெளியேறுவது தவறு என நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.வெளியூருக்குச் சென்று பிழைக்கும் அளவு உலக அறிவும் கல்வியறியும்கூட அவர்களுக்கு கிடையாது. அதனால் கிராம மக்கள் அனைவரும் அந்த தொழிற்சாலையை மட்டுமே நம்பி இருக்க வேண்டியசூழல். அந்தத் தொழிற்சாலை தருவது மட்டுமே ஊதியம்(2/n)
அங்கு வேலைக்குச் செல்லவில்லை என்றால் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். இதனால் அந்தத் தொழிற்சாலை முதலாளிகள் சொற்ப ஊதியத்திற்கு அந்த கிராம மக்களை சுரண்டினர். காலை முதல் இரவு வரை வேலை வாங்கிவிட்டு கால்வயிறு நிரம்பும் அளவு சம்பளம் மட்டும் கொடுத்தனர். தொழிலாளர்களை அடிமைகளைப்(3/n)
போல நடத்தினர். அந்த கிராமத்தில் அவர்கள் வைத்ததே சட்டம். இதனால் தொழிற்சாலை அதிக லாபத்தில் இயங்கியது. முதலாளி குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.
100 ஆண்டுகள் கழித்து அதே கிராமம்.
அந்த ஒரு தொழிற்சாலைக்கு போட்டியாக இரண்டு மூன்று (4/n)
தொழிற்சாலைகள் வந்துவிட்டன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு மூடநம்பிக்கையும் குறைந்து வெளியூருக்குச் செல்வது தவறில்லை என நினைக்கத் தொடங்கினர். பலரும் கல்வியறிவு, உலக அறிவு பெற்று வேறு வேலைக்குச் சென்று நிம்மதியாக இருந்தனர். உள்ளூரில் இருப்போருக்கும் இந்தத் தொழிற்சாலை இல்லை (5/n)
என்றால் வேறு தொழிற்சாலை என்ற வாய்ப்பு வந்தது. இதனால் முன்பு போல முதலாளிகளால் அடாவடியாக தொழிலாளர்களை ஏமாற்றி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியவில்லை.
இப்போது அந்த முதலாளிகள் என்ன செய்வார்கள்?
தொழிலாளர்களை முன்பு போல அடிமையாக நடத்த மாட்டார்கள். நடத்தினால் அனைவரும் வேறு (6/n)
தொழிற்சாலைக்கு, வேறு வேலைக்குச் சென்றுவிடுவர். வேறு தொழிற்சாலைகளின் ஊதியங்களுக்கு ஏற்ப ஊதிய உயர்வு கொடுப்பார்கள். தொழிலாளர் பக்கம் இருக்கும் சில தொழிற்சங்க தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு தொழிலாளர்களின் நலம் விரும்பியைப் போல நடிப்பார்கள்.
இவ்வாறெல்லாம் வளைந்து கொடுத்து,(7/n)
நெகிழ்ந்து செல்லவில்லை என்றால் மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விடுவர். அதனால் மொத்த தொழிற்சாலையையும் நடத்த முடியாமல் மூடவேண்டிவரும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் நட்டமடையப் போவது அவர்கள் தான்.
இப்போது கிராமத்தை இந்தியாவாகவும், அந்த தொழிற்சாலையை(8/n)
இந்து மதமாகவும், அதன் முதலாளிகளை சனாதனவாதிகளாவும் பொருத்திப் பாருங்கள். இப்போது ஏன் சனாதனவாதிகள் தங்கள் சடங்கு சம்பிரதாயங்களை விட்டுக் கொடுத்துச் செல்கின்றனர் என்பது புரியும். பழைய இறுக்கமான சாதிய கொடுமைகள் குறைந்தது ஏன் எனப் புரியும்.தொடாதே, தெருவுக்குள் வராதே, கோவிலுக்குள்(9/n)
வராதே என கூவிய அதே வாய் இன்று இந்துக்களே ஒன்று கூடுங்கள் என கூவுவது ஏன் எனப் புரியும். அண்ணாமலை போன்ற சூத்திரர்களை ஏன் பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்பது புரியும். (10/n)
இந்த நெகிழ்வுத் தன்மை சனாதனவாதிகள் திருந்தியதால் ஏற்பட்டதல்ல. மொத்த கட்டமைப்பும் உடைந்து போகாமல் இருக்க வேறு வழியின்றி அதன் முதலாளிகளால் செய்யப்படும் தந்திரோபாய பின்னகர்வு தான். (11/11)

جاري تحميل الاقتراحات...