𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة 2 قراءة Mar 11, 2023
SOLAMANTE THENEECHAKAL
ஜோஜூஜார்ஜ் நடிப்பில் இம்மாதம் 18ம் தேதி தியேட்டர்களில் வெளிவந்த ஒரு மலையாள அரைவேக்காடு க்ரைம் த்ரில்லர் மூவி. இதை இயக்கியவர் கேரளாவின் மிக பிரபலமான பல படங்களை (Achanurangatha Veedu, Arabikkatha, Neelathamara, Kerala Cafe, Diamond Necklace, Vikramadithyan
Thattumpurath Achuthan) இயக்கிய நம்பிக்கை இயக்குனர் லால்ஜோஸ். அதனாலேயே படம் நிறைய எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் உருவாக்கியது. ஆனால் அவரிடமிருந்து இவ்வளவு சுமாரான படத்தை எதிர்பார்க்கவில்லை. கதை: கொல்லம் நகரில் 2பெண் கான்ஸ்டபிள்கள் நண்பர்களாக போலீஸ்ஸ்குவாட்டர்ல வசிக்கின்றனர்.
அதில் சுஜி ஒருவனை காதலிக்கிறாள். ஒருநாள் அவர்கள் பணிபுரியும் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் கொலை செய்யப்படுகிறார். புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் ஜோஜு ஜார்ஜ் விசாரிக்கிறார். இறுதியில் அவர் கொலையாளியை கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே கதை. ஒன்றும் புரியாத நீர்த்துப் போன
விசாரணை காட்சிகள் ஈர்க்கும் தருணங்களைத் தரவில்லை, கொலையாளி யார் என்பதை முன்பே யூகிக்கக்கூடிய திரைக்கதை. நாடகத்தனமான கிளைமாக்ஸ் படத்தினை சுவாரசியம் இல்லாமல் ஆக்குகிறது. ஜோஜூவின் நடிப்பு மற்றும் இரண்டாம் பாதியில் சில திருப்பங்கள் தவிர படம் முழுக்க மெதுவான வேகம்,
சீரியல் ஸ்கிரிப்ட் போன்ற உணர்வு.
லால் ஜோஸ பழைய சூப்பர் இயக்குனராக பார்க்க ஆசை.
Rating 2.5/5

جاري تحميل الاقتراحات...