K.Annamalai
K.Annamalai

@annamalai_k

4 تغريدة Dec 24, 2022
அன்பு, தியாகம், வளம் ஆகியவற்றின் அடையாளமாக, கால சக்கரங்களைக் கடந்து, நம் தேசபக்தியின் சின்னமாக, தெய்வீக ஒளி வீசுகிறது நமது மூவர்ணக் கொடி.
பெருமைக்குரிய நம் இந்திய நாட்டின் அடிமை விலங்கை அடித்து நொறுக்கிய நம் சுதந்திரப் போராளிகளின் தியாகத்தின் அடையாளமான மூவர்ண யாத்திரை,...(1/4)
மனதின் மகிழ்ச்சியுடன், புதிய எழுச்சியுடன் தமிழ் மண்ணிலே ஆவடி நகரத்தில் ஆரவாரமாய் தொடங்கியிருக்கிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு அஸ்வின் மற்றும் மாநில செயலாளர் திரு @VinojBJP அவர்களின் முன்னிலையில், @BJP4TamilNaduவின் சகோதர சகோதரிகளுடன்,… (2/4)
… 75 ஆம் சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து காமராஜர் சிலை வரை தேசியக் கொடியை உயரப் பிடித்து நடைப்பயணம் மேற்கொண்டோம்.
(3/4)
நடைப்பயணத்தின் இறுதியாகச் சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் முதல்வருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். (4/4)

جاري تحميل الاقتراحات...