K.Annamalai
K.Annamalai

@annamalai_k

5 تغريدة Dec 24, 2022
நமது நரிக்குறவர் சகோதர சகோதரிகளுடன் இணைந்து சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் 91வது பகுதியில் நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் உரையை கேட்டு மகிழ்ந்தோம். (1/5)
பிரிட்டிஷ் ஆட்சியர் கொடுங்கோலன் ஆஷின் இறுதியை உறுதி செய்த சுதந்திரப் போராட்ட வீர்ர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவாக தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தை பற்றி இன்று தனது உரையில் குறிப்பிட்டார் நமது பாரத பிரதமர். (2/5)
ஜூலை மாதம் 28ஆம் தேதி சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார் நமது பாரத பிரதமர்.
இந்தியாவில் இது போன்ற போட்டிகள் நடப்பது நமது நாட்டிற்கு கவுரவம் சேர்க்கும் விதமாக அமைகிறது என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார். (3/5)
ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை இல்லம் தோறும் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சிந்தனையை நிலைநாட்டும் விதமாக சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று நமது நாட்டு மக்களிடம் நமது பாரத பிரதமர் கேட்டுக்கொண்டார். (4/5)
மாடம்பாக்கம் மப்பேடு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு @sembakkamveda அவர்களுக்கு வாழ்த்துக்கள். (5/5)

جاري تحميل الاقتراحات...