𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

12 تغريدة Mar 11, 2023
இந்தியாவில் வாழ்நாளில் ஒருமுறையேனும் பயணிக்க வேண்டும் என்று உள்ள டாப் 10 ரயில்வே ரூட்ஸ்...
#Top10trainRouteInIndia
10.காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே
இந்த பாதை இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பதான்கோட்டில் தொடங்கி ஜோகிந்தர் நகரில் முடிவடைகிறது, குறுகிய பாதையில் 9 மணி நேரம் 20 நிமிடங்கள் பயணித்து, 164 கி.மீ அற்புதக் காட்சிகள் உங்களுக்கு கிடைக்கும்
9.கோராபுட்-ராயகடா (ஒடிசா)
அழகிய ரயில்வே பாதைகளில் ஓடிசாவில் இருக்கும் இந்தப் பாதையும் ஒன்று, அழகிய அருவிகளுக்கு, பனிமூட்டம்களுக்கு இடையே ரயில் பயணம் செய்வது ஒரு தனி அனுபவம் தான்
8.மண்டபம்-பாம்பன்- ராமேஸ்வரம்
கடக்கும் தூரம் கொஞ்சமாக இருந்தாலும் காட்சிகள் அளவில்லாத அளவிற்கு அழகானது. கடல் மேலே செல்லும் அந்த திரில்லிங் ரயில்வே பாதை இந்தியாவிலேயே மிகவும் பிரபலம்
7. வைசாக் - அரக்குவேலி ரயில்வே பாதை.
115 கிலோமீட்டர்கள் மிகவும் அழகாக 3 மணி நேரத்தில் கண் கொள்ளா காட்சியுடன் செலவிட இந்த ரயில்பாதை மிகவும் உகந்தது.எல்லா திசையிலும் கண்ணாடி பதித்த இந்தியாவின் சுவிட்சர்லாந்து ரயில் என்று அழைக்கப்படும் இந்த ரயிலில் செல்வது தனி அனுபவம் தான்
6. மங்களூர் டு மும்பை ரயில் பாதை
91 சுரங்கங்களும் 2,000 பாலங்களும் நிறைந்த இப்பாதை மேற்கு தொடர்ச்சி மலைகளின் வழியே ஊர்ந்து செல்லுகையில் காணக்கூடிய பசுமையான காடுகளும் அழகான காட்சிகளும் பார்ப்போர் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
5.ஜெய்ப்பூர் – ஜெய்சால்மர் பாதை
இந்தியாவில் பொதுவாக காணக்கிடைக்கும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு நேர் மாறான காட்சிகளை, எட்டுத்திக்கும் கண்ணுக்கு எட்டிய மட்டும் பரந்து விரிந்துள்ள மணல் குன்றுகளுக்கு மத்தியில் காணப்படும் ஒட்டகக்கூட்டங்கள் இந்த இரயிலில் பயணம் செய்யும் போது காணலாம்.
4.கல்கா-சிம்லா ரயில்
பயணம் குறிப்பாக
குளிர்காலங்களில் சிறப்பாக இருக்கும், கிராமப்புறங்கள் பனி படர்ந்து பார்க்க அழகாக இருக்கும். ரயில் பாதை மிகவும் மலைப்பாங்கான பகுதி வழியாக செல்கிறது, இது பள்ளத்தாக்கு, மலைகள், நகரங்களின் அற்புதமான காட்சிகளை நமது கண்களுக்கு விருந்தாக்குகிறது.
3. ஊட்டி ரயில் பாதை
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை, நீலகிரி மலை ரயில் நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஆழமான காடுகள் மற்றும் பசுமையான தோட்டங்கள் வழியாக பயணிகளை கொண்டு செல்கிறது. நீலகிரி மலை ரயில் பயணம் கவர்ச்சிகரமான நீண்ட பயணம் அற்புதமான காட்சிகளை காண்பிக்கிறது.
2.ஜம்மு -உதம்பூர் இரயில் பாதை
காஷ்மீரின் பனி பொழியும் மலைத்தொடர்கள் முதல் கொந்துழு விட்டெரியும் பாலைவனம் வரை , இயற்கையின் பல்வேறு தாக்கங்களை சமாளித்து செல்லும் இந்த இரயில் பாதை ,கண்ணுக்கினிய பாதையாய் அமைகின்றது.
1.டார்ஜிலிங் இமய மலை இரயில் பாதை
அற்புதமான காடுகள், தேயிலைத் தோட்டங்கள், சிற்றூர்கள், இமய மலை – இவற்றுக்கிடையில் ஓடும் இந்தப் பாதை இந்தியாவிலேயே தனிச் சிறப்பு உள்ளதாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், கஞ்சஞ்சங்கா மலை உச்சியைக் கூட இரயில் சன்னலிலிருந்து காணும் வாய்ப்புண்டு!
கொசுரு: பெங்களூரு- கோவா ரயில் பாதை
இதில் அந்த தூத்சாகர் பால்ஸ் பார்ப்பதற்காக மட்டுமே செல்லலாம்

جاري تحميل الاقتراحات...