விருதுநகரில் மத்திய அரசு நிதியில் அமையவுள்ள மாபெரும் கைத்தறி தொழில் பூங்காவுக்கு முட்டுக்கட்டையாக உள்ள @arivalayam அரசைக் கண்டித்து இன்று @BJP4TamilNaduவின் மாநில பொதுச் செயலாளர் திரு @ProfessorBJP அவர்களின் தலைமையில் அமைதியான முறையில் பாதயாத்திரை நடைபெறுவதாக இருந்தது. (1/5)
பாதயாத்திரையை தடுத்து, சமூக விரோதிகளைக் கைது செய்வதுபோல் மக்களின் அடிப்படைத் தேவைக்காகப் போராடிய பாஜகவினரை கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். (2/5)
விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் செழிக்க 2016 முதல் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுத் திட்டங்களுக்கு எதிராகப் பொய்களைச் சொல்லி மக்களைத் திசை திருப்பி போராட்டத்தில் இறக்கிவிட்ட திமுக, இன்றும் அதே போக்கைக் கையாள்வது வியப்பாக உள்ளது. (3/5)
லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும் தொழில்துறை அமைச்சருமான திரு தங்கம் தென்னரசு தடுத்து வருவது இந்த திமுக அரசின் மற்றொரு சாதனை.
விருதுநகரில் அமையவுள்ள கைத்தறி தொழில் பூங்காவிற்குப் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை… (4/5)
விருதுநகரில் அமையவுள்ள கைத்தறி தொழில் பூங்காவிற்குப் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை… (4/5)
…அகற்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட அனைத்து வழிவகைகளையும் @arivalayam அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் முன்னெடுக்கத் @BJP4TamilNadu தயங்காது என்பதையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். (5/5)
மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் முன்னெடுக்கத் @BJP4TamilNadu தயங்காது என்பதையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். (5/5)
جاري تحميل الاقتراحات...