𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 5 قراءة Mar 11, 2023
கோழிக்கடை 555 மெஸ்,
திருப்பூர்
திருப்பூர், பல்லடம் ரோட்டில் சுமார் 55 வருடங்களுக்கும் மேலாக பாரம்பரிய சுவையின் அடையாளமாக இயங்கி வரும் அசைவ உணவகம். இதன் உரிமையாளர் பழனிச்சாமி அவரது மனைவியர் தான் சமையல் எல்லாம். இங்கு ஸ்பெஷலே குடல் கறி, தலைக்கறி தான். இங்கு கடல் உணவு கிடையாது
ஒன்லி குடல் கறி, தலைக்கறி, நாட்டுக்கோழி, மட்டன் சுக்கா, பிராய்லர் கோழி மட்டும்தான் அதுவும் திங்கள், செவ்வாய் மட்டும் நாட்டுக்கோழி கிடைக்கும் புதன், வியாழன் மட்டும் மட்டன் சுக்கா கிடைக்கும். ஞாயிறு கடை விடுமுறை. இங்கு எப்போதுமே மதிய மதியவேளை கூட்டம் அதிகமாக இருக்கும்
காத்திருந்து தான் சாப்பிட வேண்டும் காரணம் உள்ளே 12 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். ஆனால் அந்த காத்திருப்புக்கு உங்களுக்கு பலன் நிச்சயம் கிடைக்கும் அப்படி ஒரு அருமையான ருசி இந்த கடையில். காலை டிபனுக்கு உங்களுக்கு குடல்கறி கிடைக்கும். சமீபத்தில்தான் இரவு கடையும்
ஆரம்பித்திருக்கிறார்கள் அடுத்த முறை திருப்பூர் சென்றால் கண்டிப்பாக அங்கு சாப்பிட்டு பாருங்கள்
Kolikadai 555 mess
8610736889
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...