𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 9 قراءة Mar 11, 2023
முட்டல் அருவி
ஆத்தூர் முல்லைவாடி சாலையில் 15கி.மீ தொலைவில் முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவி அமைந்துள்ளது.இதை இங்குள்ள மக்கள் குழந்தைகளின் குற்றாலம் என்று அழைக்கின்றார்கள். வனத்துறை
இந்த எழில்மிகு அருவி பகுதியை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மேம்படுத்தி இந்த அருவியின் சுற்றுபகுதிகளையும் சிறந்த முறையில் பராமரித்து வருகிறது.
கல்வராயன் மலைப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களிலும் நல்ல மழைப்பொழிவைப் பெருகின்றன. இந்த நீர் வழிந்தோடி ஆணைவாரி
அருவியில் விழுந்து அருகில் உள்ள முட்டல் கிராம எரியில் சேகரமாகிறது. இந்த ஏரியில் சுற்றலா பயணிகளின் வசதிக்காக படகு சவாரி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரால் ஏரியின் கரை அருகிலேயே தங்கும் அறைகள் கட்டப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு நியாமான வாடகைக்கு வழங்கப்படுகிறது.
சேலம், ஆத்தூர், சின்ன சேலம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் ஒரு நாள் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று மகிழ்ந்திருக்க ஏற்ற இடம்
தொடர்புக்கு :
04282-240839
Muttal Falls
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...