Vasavi Narayanan (Modi is My Familyman)
Vasavi Narayanan (Modi is My Familyman)

@VasaviNarayanan

14 تغريدة 22 قراءة Jul 15, 2022
🌺பெண்ணே.... தெரியுமா....🌺
🍃திருமாங்கல்ய சரடு...🍃
இன்றைய காலக்கட்டத்தில் ஃபேஷனாக எண்ணிக் கொண்டு, பலரும் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர்.
*"மாங்கல்ய சரடை"*தான் சுமங்கலித்துவம் நிறைந்த மங்கலப் பொருளாகக் குறிக்கின்றனர் சான்றோர்.
பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும்.
பண்டைய காலங்களில்...
பருத்தி இழைகளால் ஆன மாங்கல்ய சரடைத்தான் அணிந்தனர். மாங்கல்ய சரடிற்கு தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து, சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு.
ஆதலின் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில்தான் கோக்க வேண்டுமே தவிர; தங்கச் சங்கிலியில் ஒரு போதும் கோத்தல் கூடாது.
மஞ்சள் கயிறு மகத்துவம் ஆனது
தெய்வீகமானது மட்டுமல்ல... தினமும் குளிக்கையில் அதில் மஞ்சள் உரைத்துத் தடவுவதால், எப்போதும் பாக்டீரியா வளராது தடுக்கும்.
ஆண்கள் தலை நிமிர்ந்து செல்பவர்கள் எதிரே வரும் பெண் கழூத்தில் மஞ்சள் சரடைக் கண்டால் மணமானவள் எனப் புரிந்து, அவள் முகத்தைப் பார்க்காமல் வணங்கி நகர்வர் ; பெண்கள் தலைகவிழ்ந்து செல்வதால், எதிரில் வரும் ஆண் காலில் மிஞ்சி எனும் மெட்டி இருந்தால், அவர் முகத்தை நிமிர்ந்து பாராமல் செல்வர்
எனச் சொல்வதுண்டு.!
சரடினால் மாங்கல்யம் போடுபவர்கள் மட்டும் நீண்ட ஆயுளுடன் இருப்பாரா? என்ற சந்தேகம் எழலாம்.
ஆனால் நீங்கள் நினைக்கும் எண்ணம் வேறு... சாதாரணமான நிலையில் கூட பெண்களின் மஞ்சள் கயிற்றுக்கு என்று ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் எனக் கூறப்படும் நோய்கள் உடனே அவரை பாதிக்காது.
கர்ம வினைகள் குறையத் தொடங்கும்.
குங்கும அர்ச்சனையின் பலன்கள் சரடுக்கு உண்டு. மஞ்சளுடன் சுண்ணம் கலந்து செய்வதால் எதிர்வினைகளை அது எரித்துவிடும். உடனே போகும் உயிரை கூட அந்த தாலிச் சரடின் மகத்துவம் காக்கும்.
தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்ய சரடானது தன்னில் ஈர்த்து
ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது.
அதில் கோக்கப்படும் தங்கம், நெஞ்சுக்குழியில் ஏற்படும் பிடிப்பு வலியை வராது தடுக்கும். தற்போது போலல்லாது, முன்பு தங்கத்தினுள் அரக்கு அடைத்து செய்வர். அதன் கணத்தால்தான் இது தடுக்கப்படுகிறது.
மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில்
எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து, எப்போதும் சுமங்கலித்துவதைக் கட்டிக் காக்கும். பெண்களுக்கு மாங்கல்யமே பிரம்ம முடிச்சு.
இதில் முதல் இரண்டு முடிச்சைக் கணவரும், மூன்றாம் முடிச்சை நாற்று-அந்நாரும் போடுவர். அதாவது, கணவர், ப்ரும்மத்தின் பேரில் சத்யம் செய்து,
இவளைக் கைவிடமாட்டேன் என ஒன்றும், இனி இவள் பெற்றோர்க்கு நான் தலைமகன் போல இருந்து, எல்லா கடமையும் செய்வேன் என இரண்டாம் முடிச்சும் போட, நாற்று-அந்நார் என்னைப் போல உன்னையும் எங்கள் குடும்பத்தின் மகளாக நடத்துவோம் என சத்யமிட்டு மூன்றாம் முடிச்சையும் இடுவதாகப் பெரியோர் கூறுவர்.
அதனால் மகளின் பெற்றோர் மகிழ்ந்து, அவளின் நாற்று-அந்நாருக்கு முடியிட்ட கைக்கு கல்யாண வளை எனும் கண்ணாடி வளையல்கள் போட்டு, புடவை, புஷ்பம், தாம்பூலம், பழங்கள் தந்து ஆசீர்வதிப்பர்.
இவை எல்லாம் சொந்தங்கள் வலுப்பெற செய்த சடங்குகள்... இதை வெறும் சம்ப்ரதாயமாகப் பார்க்கும் ஜந்துக்களுக்கு
இதன் மகிமை எங்கே தெரியப் போகிறது?
அந்தத் தொழிலை பெண்ணுரிமை எனும் மூட ஜென்மங்கள் தாலி அகற்றும் போராட்டம்தான் செய்யும்... அது எப்படியோ ஒழியட்டும்... நம்மை ஏன் தடுக்க வேண்டும் இவை பொய்யெனக் கூறி? இதன் உளவியல், அறிவியல் உண்மைகளை நான் கூறி விட்டேன். .
காற்றை உணர்ந்தால்தான் தெரியும். இவற்றையும் ஸ்ரத்தையாயிருந்து அநுபவித்தால் தெரியும். அதைவிடுத்து எதிர்ப்பது எவ்வித பகுத்தறிவோ? ஈ.வே.ரா பேத்திகளுக்கு இது புரியுமோ?
என்ன @malathy_j1508 Ji, தங்கள் கட்டுரைக்கு ஓபனிங் ஓ.கே.வா?
அடுத்த பாகம் கூந்தல் பற்றியது...
🍁வாஸவி நாராயணன்🍁
@threadreaderapp Please compile

جاري تحميل الاقتراحات...