𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

7 تغريدة Mar 11, 2023
ரூபி பீச்,
பாண்டிச்சேரி
மதுப்பிரியர்களின் சொர்க்கலோகமாம் பாண்டிச்சேரியில் ஒரு புதிய தேவலோகம் தான் இந்த கடற்கரை. பாண்டிச்சேரி அதன் கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது, இப்போது மேலும் ஒரு அழகான கடற்கரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆரோவில் பீச், ப்ரோமனேட் பீச், பாரடைஸ்பீச்
#RubyBeach
மற்றும் செரினிட்டிபீச் ஆகியவை பாண்டிச்சேரிக்கு நீங்கள் செல்லும் வழக்கமான கடற்கரைகள். இனிமேல் புதிதாக உருவான கடற்கரைகள் ஆன, பாண்டி மெரினாபீச், ஈடன் பீச், சண்டூன்ஸ் பீச் மற்றும் ரூபி பீச் ஆகியவை நீங்கள் விரும்பும் பட்டியலில் சேர்க்கப்படும். ரூபி பீச் பாண்டிச்சேரியில் இருந்து 8 KM
தொலைவில் கடலூர் செல்லும் சாலையில் அரியாங்குப்பம் அருகில் உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல அங்குள்ளவர்களுக்கு இந்த கடற்கரைய வீராம்பட்டினம் பீச் என்று கூறுவார்கள். இப்போது அங்கு தனியார், கடற்கரைக்கு எதிர்புறம் உள்ள இடத்தில் ஒரு பூங்கா அமைத்து உள்ளனர் அதனால் இப்போது இந்த இடத்திற்கு
ரூபி பீச் என்று பெயர். இந்த இடம் முன்பிருந்தே சுத்தமாகத்தான் இருக்கும் இப்போது இன்னும் இவர்கள் அழகாக்கி உள்ளனர் கடற்கரையில் சிறிய சிறிய ஹட் போட்டு உள்ளனர் ஒரு வாட்ச் டவர் உண்டு. உள்ளேயே சிறந்த உணவகம், பார் உண்டு. (2 பீர் வாங்கினால் 1 பீர் இலவசம்). குதிரை சவாரி மற்றும் ஏடிவி சவாரி
குழந்தைகள் விளையாடும் பகுதி, என ஒருநாள் பிக்னிக்கு தேவையான அனைத்தும் இங்கு உண்டு. இதன் பக்கத்திலேயே பழம்பெரும் நகரமான அரிக்கன்மேடு உள்ளது அங்கு அகழ்வாராய்ச்சி செய்து கிமு 200ம் நூற்றாண்டிலிருந்து கிபி 200ம் நூற்றாண்டு வரை அங்கு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர்
இங்கும் நீங்கள் சென்று பார்க்கலாம். இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மது பிரியர்கள் எந்தவிதமான பயமும் இன்றி சுதந்திரமாக அமர்ந்து சந்தோசமாக என்ஜாய் செய்யலாம். குழந்தைகளோடு, குடும்பத்தோடு வருபவர்கள் மாலை நேரங்களில் வருவது நல்லது.
அடுத்தமுறை பாண்டிச்சேரி செல்ல திட்டம் இருந்தால் கண்டிப்பாக இந்த கடற்கரையில் வந்து உல்லாசத்தை அனுபவியுங்கள்
Ruby Beach
9943692345
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...