𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

6 تغريدة 4 قراءة Mar 11, 2023
டேனிஷ் கோட்டை,
தரங்கம்பாடி
கிபி 15ஆம் நூற்றாண்டு இறுதியில் டச்சுக்காரர்கள் இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் அட்மிரல் ஓவ்கிட் என்பவர் அனுப்பப்பட்டார்
அவர் வந்து தங்கிய இடம் தரங்கம்பாடி. அவர் அப்போது தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கருடன் செய்துகொண்ட
உடன்படிக்கை படி கடலோர பகுதியை சேர்ந்த 8KM வாடகைக்கு எடுத்து இந்த கோட்டையை கட்டினார்.
டேன்ஸ்பர்க் என்று பெயரிடப்பட்ட இக்கோட்டையைப் பாதுகாக்க நென்றிக்ஹஸ் என்பவர் தளபதியாக நியமிக்கப்பட்டார். 36 பீரங்கிகள் இக்கோட்டையில் நிறுவப் பட்டன. டேனிஷ் கோட்டகிலேயே 2வது பெரிய கோட்டை இதுவாகும்
முதல் கோட்டை "க்ரோன்பெர்க்" இது டென்மார்க்கின் உள்ளது. இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர்
கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய கோட்டையின் நீளம் 60 மீ மற்றும் அகலம் சுமார் 11 மீ. கோட்டையின் மையத்தில் தேவாலய
அறை உள்ளது. இது தற்போது
அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. 1845ல் இந்தக் கோட்டை மற்றும் தரங்கம்பாடி ஊரை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டது டச்சு அரசாங்கம். இந்திய விடுதலைக்குப்பின் இந்திய அரசு இந்தக் கோட்டையை ஆய்வு மாளிகை ஆக மாற்றியது பின்னர் இப்போது( 2001முதல்) இது தொல்லியல் துறையின்
கட்டுப்பாட்டில் உள்ளது இங்கு உள்ள நுழைவாயில் தெருக்கள் கட்டிடங்களை பார்க்கும்போது ஏதோ ஐரோப்பியாவில் உள்ள சிறிய நகரத்திற்கு வந்து விட்டது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இங்குள்ள அருங்காட்சியகத்தில் டேனிஷ் பொருட்கள், காசுகள் டேனிஷ்-தமிழ் ஒப்பந்தங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட தென் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்கள் இங்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். டேனிஷ் கோட்டை பார்க்கவேண்டிய ஒரு ஸ்தலம், தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
இந்தக் கோட்டை மயிலாடுதுறையில் இருந்து 30 KM தொலைவில் உள்ளது

جاري تحميل الاقتراحات...