வித்யா
வித்யா

@dadmumzworld

41 تغريدة 597 قراءة Jun 22, 2022
(குறிப்பு : நான் பயன்படுத்தி வரும் ஒன்றையே பகிர்கிறேன். தேவைப்படுவோர், இதனின் உண்மைத் தன்மையை தேடிப் பாருங்கள்)
#பகிர்வு
#மலர்மருத்துவம்
💐🌸💮🌹🥀🌺🌻🌼🌷
#ஆற்றல்அலைவரிசைஅதிர்வு
அரச குடும்பம் ரகசியமாக வைத்திருந்த மருத்துவ முறைகளில் ஒன்று தான் மலர் மருத்துவம் (1/n)
இந்த மலர் மருத்துவம் ஆற்றல், அலைவரிசை, அதிர்வு என்னும் கோட்பாட்டின் படி வேலை செய்யும்.நாம் மருந்தாக உட்கொள்ளும் ஒவ்வொரு மூலிகைகளின் பலன்களை விட முழுமையான விரைவான பலன்களை தர வல்லது இந்த மலர் மருத்துவம் (2/n)
#ஆற்றலைதடுக்கும்மனநிலை🌺
பொதுவாகஇந்த மலர் மருத்துவம் நோய்களுக்கான மருந்தாக இல்லாமல் மனநிலைக்கான மருந்தாக இருக்கிறது.உங்களுக்கு கேள்வி வரலாம் மனநிலைக்கு மருந்து கொடுப்பதால் நோய் எப்படி தீரும் என்று? (3/n)
ஆம் நமக்கு ஏற்படும் அத்தனை நோய்களும் நம்முடைய மனநிலையின் காரணத்தினால் தான் உண்டாகிறது விபத்துகள் உட்பட...என்பது இந்த ஆய்வின் தகவல்...
அது மட்டும் அல்லாமல் மனிதனின் ஆற்றலை தடுத்து நிற்கும் இந்த மனநிலைகளை விலக்கினால் அவனது ஆற்றல் அளப்பறியது என்பதை உணர முடியும்..(4/n)
#எட்வர்ட்பாச் 🌼
இந்த மருத்துவ முறையை அறிமுகபடுத்தியவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் Dr. Edward bach.
#ஏழுவிதமனநிலை💐
இந்த மருந்துக்களை இவர் 7வித மனநிலைகளை மையப்படுத்தி 38 குணங்களுக்கான மருந்துகளாக தந்துள்ளார். இந்த மருந்தின் சிறப்பு எந்த பக்க விளைவும் இல்லை என்பது தான்(5/n)
மலர்களின் மணமும் மனிதனின் மனமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது என்பதை இதை படிக்கும்போது நீங்கள் உணரலாம்.மலர் மருத்துவம் அறிமுகபடுத்திய எட்வர்ட் பாச் அவர்கள் விளக்கிய 7 மனநிலைகளையும் 38 குணங்களையும் புரிந்து கொண்டால்தான் நமக்கு தேவையான மருந்தை பயன்படுத்த எளிதாக இருக்கும்(6/n)
ஏழு மனநிலைகள்
1.)அச்ச உணர்வு கொண்டவர்கள்
2.)உறுதியின்மை கொண்டவர்கள்
3.)சூழலுக்கு ஏற்ற போதுமான ஆர்வம் இல்லாதவர்கள்
4.)தனிமை உணர்வு கொண்டவர்கள்
5.)குற்ற உணர்வு உடையவர்கள்
6.)நம்பிக்கை இழந்தவர்கள் கவலை கொண்டவர்கள்
7.) பிறர் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் (7/n)
இந்த ஏழு வகை மனநிலையை 38குணங்களாக விவரித்து அதற்கான மருந்தின் பெயர்களை பார்ப்போம்
💐அச்ச உணர்வு கொண்டவர்கள்💐
1.)ROCK ROSE(ராக் ரோஸ் )
திகில் பயம், விபத்து, துக்க செய்தி கேட்டு வாய் அடைத்து போகுதல்.. போன்ற அவசர ஆபத்து காலத்தில் உண்டாகும் தன்மை (8/n)
2.)MIMULUS(மிமுலசு)
காரணத்துடன் வரும் பயம், ஒரு செயலை சரியாக செய்து முடிக்காமல் அதன் விளைவை பற்றி பயம் கொள்வது
3.)CHERRY PLUM(செரி ப்ளம் )
தீராத ஆசை, வெறி, தற்கொலை எண்ணம் கொண்ட குணம்
4.)ASPEN(அஸ்பென் )
எந்த காரணமும் இல்லாமல் ஏதோ ஒன்று நடந்துவிடுமோ என்ற உச்ச கட்ட பயம் (9/n)
5.)RED CHESTNUT(ரெட் செஸ்ட்னட் )
அதிக கவலை மித மிஞ்சிய பயம், வெளியில் அனுப்பிவிட்டு வீட்டிற்குள் இருந்து கவலை கலந்து பயத்துடன் இருக்கும் தாயின் தன்மை (10/n)
💐உறுதியின்மை கொண்டவர்கள்💐
6.)CERATO(செராட்டோ)
இதை செய்யலாமா அதை செய்யலாமா, இதை வாங்கலாமா அதை வாங்கலாமா என்று முடிவு எடுக்க முடியாத மனநிலை
7.)SCLERANTHUS (கிளராந்தசு)
தள்ளி போடும் பழக்கம், பிறகு செய்யலாம் பிறகு செய்யலாம் என்று தள்ளி போட்டு கொண்டே இருப்பது (11/n)
8.)GENTIAN (சென்சன்)
எப்பொழுதும் நம்பிக்கை இல்லாத பேச்சு, அது செய்யமுடியாது, அது நடக்காது, சந்தேக எண்ணத்துடன் கூடிய பயம், தானும் கெட்டு பிறரையும் கெடுப்பது (12/n)
9.)GORSE(கோர்ஸ்)
அனைத்தும் செய்துவிட்டேன் நடக்கவில்லை, எல்லா மருந்தும் சாப்பிட்டுவிட்டேன் சரியாகவில்லை என்ற நம்பிக்கை அற்ற குணம்
10.)HORNBEAM(ஆர்ன்பீம்)
ஒரு விஷயத்தை பார்த்ததுமே இதை எவ்வாறு செய்ய முடியும் என்று மலைத்து போகும் நம்பிக்கை அற்ற தன்மை (13/n)
11.)WILD OAT(வைல்ட் ஓட் )
குறிக்கோள் இல்லாத தன்மை ஏனோ தானோ வாழ்க்கை
💐சூழலுக்கு ஏற்ற போதுமான ஆர்வம் இல்லாதவர்கள்💐
12.)CLEMATIS(கிளெமாட்டீஸ் )
எப்பொழுதும் பகல் கனவு காண்பவர்கள் எதிர்காலத்தில் வாழும் தன்மை (14/n)
13.)HONEYSUCKLE(ஹனிசக்கிள் )
எனக்கு இவ்வாறு நடந்திருக்க கூடாது, அவர் இறந்திருக்கக்கூடாது என்று நடந்து முடிந்த கடந்த காலத்தை பற்றியே சிந்திப்பவர்கள்
14.)WILDROSE(வைல்ட் ரோஸ் )
எதிலும் அக்கறை இன்மை பொறுப்பு இன்மை எல்லாம் நடக்குற படி தான் நடக்கும் என்ற குணம் (15/n)
15.)OLIVE (ஆலிவ் )
எந்த செயல் செய்தாலும் உடனே மன அளவிலும் உடல் அளவிலும் சோர்ந்து விடும் தன்மை
16.)WHITE CHESTNUT( வைட் செஸ்ட் நட் )
சிறு வயதில் இருந்து வரும் கவலை அல்லது நெடுநாள் கவலை
17.)MUSTARD(மஸ்டர்ட்)
ஆழ்ந்த தூக்கம் உறவு சம்மந்தமான துக்க தன்மை (16/n)
18.)CHESTNUT BUD(செஸ்ட் நட் பட் )
செய்த தவறுகளை திரும்ப திரும்ப செய்வது, மறதி உள்ள குணம்
🥀தனிமை உணர்வு கொண்டவர்கள்
19.)WATER VIOLET(வாட்டர் வயலட் )
தனித்து காணப்பட வேண்டும் என்ற பெருமை குணம்.. தன் இடத்திற்கு யாரும் வந்துவிடக்கூடாது என்ற குணம் (17/n)
20.)IMPATIENS(இம்பேசன்ஸ் )
சிறிதும் பொறுமை இல்லாத தன்மை கால் தரையில் நிற்காது
21.) HEATHER (ஈதர் )
அர்த்தமற்ற பேச்சு, வாய்க்கு வந்ததை பேசி கொண்டே இருப்பவர்.. இவர்களால் தனிமையில் இருக்கமுடியாது அமைதியாக இருக்கமுடியாது (18/n)
💐குற்ற உணர்வு உடையவர்கள்💐
22.)AGRIMONY(அக்ரிமோனி )
தனக்கு உள்ள கவலைகளையும் துன்பங்களையும் மறைத்து வெளியில் சிரித்து கொண்டிருப்பவர்கள்
23.)CENTUARY(செண்டாரி )
அனைத்தையும் விட்டு கொடுத்து விட்டு கொடுத்து தன்னுடைய சுயத்தை இழக்கும் குணம் (19/n)
24.)WALLNUT (வால்நட்)
புதிய மாற்றங்கள் ஏற்படும் சூழலில் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறும் தன்மை... போதைக்கு அடிமை ஆதல்
25.)HOLLY(ஆல்லி )
அளவுக்கு அதிகமான பொறாமை, பிறர் நன்றாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத மனநிலை..
நம்பிக்கை இழந்தவர்கள் கவலை கொண்டவர்கள் (20/n)
26.)LARCH(இலார்ச்)
படிப்பில் ஆர்வமின்மை, கடைசிவரை பிறரை மட்டுமே உயர்த்தி தன்னை தாழ்த்தி கொள்ளும் தன்மை
27.)PINE(பைன் )
எதாவது ஒரு தவறான செயல் நடந்துவிட்டால் அதற்கு தன்னை காரணமாக கருதி கொள்வது குற்ற உணர்வு மனப்பான்மை (21/n)
28.)ELM(எல்ம் )
பொறுப்புகளை அதிகமாக சுமப்பது, அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்வது
29.)SWEET CHESTNUT(ஸ்வீட் செஸ்ட் நட் )
தொடர்ச்சியான பல தோல்வி க்கு பின், மிகப்பெரிய பொருளாதார இழப்புக்கு பின் இருக்கும் தன்மை (22/n)
30.)STAR OF BETHLEHEM(ஸ்டார் ஆப் பெத்லேகம்)
நம்பிக்கை ஒளி, ஒருவருக்கு ஒரு பெருநோய் வந்துவிட்டால் உண்டாகும் தன்மை, அவளவுதான் நாம் இறந்து விடுவோம்
31.)WILLOW (வில்லோ )
தன்னுடைய தவறையும் பிறர் மீது சொல்லுதல், குறை காணுதலே பழக்கமாக வைத்து இருத்தல் (23/n)
32.)OAK(ஓக்)
செய்ய முடியாத காரியத்தை செய்து முடிப்பேன் என்று வாழும் தன்மை
33.)CRAP APPLE (கிராப் ஆப்பிள் )
அருவருப்பு தன்மை.. அதீத சுத்தம், கழுவிய பொருளை திரும்ப திரும்ப கழுவுதல், அனைத்து இடத்திலும் சுத்தம் பார்த்தல் (24/n)
💐பிறர் மீது அதிக அக்கறை கொண்டவர்கள்💐
34.)CHICORY(சிக்கோரி )
தனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும், தன்னுடையது மட்டும் தான் சரி, வீட்டை விட்டு பிரிந்து செல்ல முடியாத குழந்தை.. Motherly type
35.)VERVAIN (வெர்வையின்)
தன் சக்திக்கு மீறி பேராசை கொள்ளுதல் (25/n)
36.)VINE( வைன் )
நான் சொல்வதை செய்து தான் ஆக வேண்டும், சர்வாதிகார குணம் ஹிட்லர் போன்று
37.)BEACH(பீச் )
திட்டமிட்டவை அனைத்தும் பிசிரு இல்லாமல் நடந்தே ஆக வேண்டும் என்னும் நிலையில் ஒன்னும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தும் குணம் (26/n)
38.)ROCK WATER(ராக் வாட்டர் )
நான் இப்படி தான் வாழ்வேன் என்று கொள்கைபிடிப்போடு வளைந்து கொடுக்க முடியாமல் வாழும் தன்மை... பிறரையும் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது. (27/n)
இந்த 38 பெயர்களும் மலர் மருந்தின் பெயர்கள்..இந்த குணங்கள் தான் நம் அனைத்து துன்பத்திற்கும் காரணமாக உள்ளது.
#மருந்துகண்டறியும்முறை
வியாதியுற்ற நபர்களின் பேச்சு, எண்ணம், செயல் ஆகியவற்றை தீர்மானித்தே இந்த துறையில் மருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது (28/n)
மனநிலை அறிந்து மருந்து கொடுக்கவேண்டும் என்றவுடன் நோயாளியிடம் கேள்விகள் கேட்டு இது உள்ளதா இது உள்ளதா என்று மனதை ஆராய்ந்து சொல்லும் மனோதத்தத்துவ துறை போன்று அல்ல..(29/n)
நோயாளிகளை இடைமறிக்காமல் பேச அனுமதிக்க வேண்டும்
பேச அனுமதித்து அவர்களின் பேச்சு எண்ணம், செயல் ஆகியவற்றை ஆராய்ந்து மருந்துதர வேண்டும்.
#Wallnut
போதை உலகம் மிகப்பெரியது அந்த போதை உலகில் பல வகை உண்டு அதில் பெரும்பான்மையானது, மது, புகை, பெண் போன்றவை.. இந்த மாதிரியான போதைகளில்..(30/n)
..அடிமையானவர்கள் கலை துறையில் சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்கள் பெரும் சாதனை படைக்க வேண்டியவர்கள் ஆனால் வாழ்வில் புதுமையை விரும்பும் இவர்களுக்கு சலிப்பு (boredom) என்ற குணம் இவர்களை போதைக்கு தள்ளி விடுகுகிறது..(31/n)
இவர்களுக்கு விருப்பமில்லாத, சகித்து கொள்ள முடியாத மாற்றங்கள் ஏற்படும் தருணத்தில் போதையை தேடி செல்கின்றனர்,இவர்கள் அந்த குணத்தில் இருந்து மீண்டுவர #wallnut என்ற மலர் மருந்தை எடுத்து கொள்ள வேண்டும்.. அவ்வாறு எடுத்து கொள்ளும்போழுது.. (32/n)
அவர்களின் படைப்பாற்றல் சிந்தனை வெளிவரும் அது கதை,ஓவியம், இசை என ஏதாவது ஒரு ஆற்றலாக வெளிப்படும்.அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து வாகை சூடுவர் .இந்த wallnut என்ற மருந்து மூளையை பலப்படுத்தும் மருந்தாகும். அதனால் தான் வால் நட்டின் உருவமும் மூளையை போலவே இருக்கும்(33/n)
#Cherryplum
தாங்க முடியாத மனநிலைகள் (கோபம், தாகம், வலி )என எதுவாக இருந்தாலும், அவர்களின் அந்த மனநிலையை மாற்றி அவர்களின் நோய்களும் குணமாக்கும் தன்மை இந்த மருந்திற்கு உண்டு, இந்த மனநிலை மனிதர்களே சிறந்த பாடகர்களாக ஆகும் திறமை உள்ளவர்கள்.. ஒரு மனிதரின் மன்பான்மையை வைத்தே (34/n)
அவர்களுக்கான துறையை அறிந்து கொள்ள முடியும், அந்த மனப்பான்மையை மாற்றிய பிறகு அவர் humming செய்து கொண்டே அனைத்து செயலகளையும் செய்வார்
#Rockrose
திகில், விபத்து, கண்றாவி, பயங்கரம், பரிதாபம், நெருப்பு
போன்ற வார்த்தைகள் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ.. (35/n)
..அங்கெல்லாம் சூழலில் உள்ளவர்களுக்கும் இந்த மருந்தை உட்கொள்ளவைப்பதன் மூலம் அந்த சூழலை அங்கு மாற்ற முடியும்
ஒருவர் சாலையில் செல்லும் போது திடிரென அவருக்கு மிக அருகில் லாரி மோதும் வகையில் கடந்து செல்லும் போது ஏற்பட்ட திகிலை உடனடியாக சரி செய்யும்..(36/n)
ஒரு பேருந்து சென்று விபத்து ஏற்பட்ட பிறகு அதில் உள்ளவர்களுக்கு உடனே அதில் இருந்து வெளிவர உதவும்...
சில நோயாளிகள் பார்க்க பரிதாபமான சூழ்நிலையில் இருப்பார்கள் உணவு உட்கொள்ள முடியாத சூழ்நிலையிலும்,எழுந்து சிறுநீர் கூட கழிக்க முடியாத நிலையில் இருப்பார்கள் அந்த சூழலில் உள்ள (36/n)
அவருக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த மருந்து கொடுப்பதால் சூழல் நேர் எதிராக மாற்றம் அடையும்
சிலருக்கு பார்க்கவே பயங்கரமான காயங்களோ எலும்பு முறிவு விஷயங்களோ இருக்கும் அவர்களுக்கு இந்த மருந்தால் மாற்றம் நிகழ்ந்து சூழல் மாறுபடும் (37/n)
மேற்கண்ட மருந்துகளை மூன்று மாதங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.. மருந்தின் அளவு ஒன்று முதல் மூன்று சொட்டுக்களை தண்ணீரில் விட்டோ ஹோமியோபதி மாத்திரைகளில் சொட்டுக்கள் விட்டு திடப்பொருளாகவும் எடுத்துகொள்ளலாம்.. ஒரு நாளைக்கி இரண்டு வேலைகள் எடுத்துக்கொள்ளலாம்..(38/n)
தமிழ்நாட்டு மலர் மருத்துவ
துறையின் encyclopedia போன்ற தகவல்களையும் அனுபவங்களையும் ஒன்று திரட்டியவறான Dr. v. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பரிந்துரைத்த மருந்து கம்பெனியின் பெயரை பதிவிடுகிறேன்..(39/n)
#Hahnemann
#Healingherb..
இதில் healing herb விலை அதிகம் என்பதால் hahnemann மருந்தை flipkart, அமேசான், TATA 1 mg போன்ற ஆன்லைன் தளத்திலோ.ஹோமியோபதி மெடிக்கல் கடைகளிலோ வாங்கி கொள்ளலாம்
எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்பதால் தவறான மருந்து உட்கொண்டலும் எந்த தீங்கும் செய்துவிடாது (40/40)

جاري تحميل الاقتراحات...