வித்யா
வித்யா

@dadmumzworld

14 تغريدة 125 قراءة Jun 21, 2022
@areshtanaymi இந்த பாடலில்..தவம் செய்பவர்கள்
ந ம சி வ ய ..இந்த ஐந்து எழுத்தில்
அந்த ஓர் எழுத்தை யாருமே அறிந்து
ஓதவில்லை..என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஓர் எழுத்து ஏது?
அதை எவ்வாறு ஓத வேண்டும்.?
@areshtanaymi மூன்று மண்டலத்திலும்..
முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும்
நவின்டெழுந்த அட்சரம்..
தோன்றும் ஓர் எழுத்துள்ளே!!
சொல்ல எங்கும் இல்லையே!!
(சிவவாக்கியர்)
இந்த பாடலை கவனியுங்கள்!!!
பாம்பின் வாயில் தானாக
வரும் அட்சரம்...(மந்திரம்)
@areshtanaymi தோன்றும் ஓர் எழுத்துள்ளே!!
சொல்ல எங்கும் இல்லையே!!
அந்த ஓர் எழுத்து மந்திரம் எது?
அதை எவ்வாறு ஓத வேண்டும்??
யோக மார்கத்தின் மொத்த ரகசியமும்
இந்த ஒற்றை எழுத்திலும்...அதை
ஓதும் முறையிலும் உள்ளது....?
இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
@areshtanaymi இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.
கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்.. “ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி”
@areshtanaymi திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.
“நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே”
நாயோட்டு மந்திரம்
இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம்
நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம்
இந் நாயை வீடு சேர்க்குமே!
(திருமூலர்)
@areshtanaymi வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.
“ஒரேழுத்தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே ”
@areshtanaymi அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.
“எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே எடுத்துரைக்க
இவ்வுலகில் எவருமில்ல.
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தியாமே!”..
இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?
@areshtanaymi ந ம சி வ ய..ஐந்திழுத்தில்..நான்கு எழுத்துக்கள் ..'அ"காரத்தில் முடியும்..
ன்+(அ)=ந
ம்+(அ)=ம
சி???????
வ்+(அ)=வ
ஈ+(அ)=ய..
இந்த"சி"காரத்தில் ..மட்டும் "அ"காரம் வராது....
பஞ்சபூதங்கள் எதுவும் ஓசை எழுப்பாது..காற்று மட்டும் தான் ஓசை
எழுப்பும்....காற்றின் ஓசை(சத்தம்)
@areshtanaymi """"""""ஸ்""""ஸ்""""""..என்ற சத்தத்துடன் தான் வெளிப்படும்...
அதாவது.....
ஸ்+இ=சி...
சி என்று உச்சரித்து பாருங்கள்..
முதலில்..""ஸ்"" என்ற சத்தத்துடன் தான் """சி"""காரம் வெளிப்படும்..
இதைத்தான் திருமூலர் நாயோட்டு மந்திரம் என்று சொல்கிறார் .....
நாயை எப்படி விரட்டுவோம்?
@areshtanaymi சி..சி...என்று தானே விரட்டவோம்,,,
இந்த சிறப்புமிக்க """சி""காரத்தை
எப்படி ஓதுவது???
இடாநாடி...பின்களாநாடி
இடகலை..வலதுகலை..
என்பது எல்லோருக்கும் தெரியும்
சூட்சுநாடி(சூழ்முனை)எது என்று யாருமே செல்லமாட்டார்கள். ..
சூட்சுமநாடி..என்பது..உள்நாக்கு
(,அன்நாக்கு)மேல் பகுதி ல் உள்ள
@areshtanaymi ஓட்டை.இதுதான்..சூட்சுமநாடி..
இதுவே பிரம்மரந்திர துவாரம்.
நாம் தூங்கும் போது சுவாசம் உள்நாக்கின் வழியாகத்தான் ஓடும்.அதனால் தான் சிலருக்கு குறட்டை வரும்.நமது முன்னோர்கள் தலைக்கு
தலையனை வைக்காமல் தலைக்கு கைவைத்து தூங்க காரணம் இதுதான்.கையை மாற்றியமைத்து படுத்தால்
சுவாசம் மாறும்
@areshtanaymi நாம் தூங்கும்போது நடைபெறும் இயல்பான சுவாசத்தை ...நாம் விழித்திருக்கும் போது செயல்படுத்துவதே
வாசியோகம் ..
நீங்கள் தியானம் சொய்யும்போது உன்நாக்கு ஓட்டை வழியாக சுவாசித்து பழகுங்கள்..அப்போது உங்கது சுவாசத்தின் ஓசை ""சி""என்ற லயத்துடன் இயங்கும்..
@areshtanaymi உங்களின் சுவாசம் ஒரு லயத்துடன் சீராக இயங்கும்போது உங்களின் முதுகுத் தண்டு தானாகவே நேராக இருக்கும்
இந்த "சி"காரம் தான் ஊமை எழுத்து..
இந்த "சி"காரம் தான் நாயோட்டு மந்திரம்...
பாம்பு சீறும்போது வரும் சத்தம் "ஸ்,,""சி"....
@areshtanaymi லிங்கத்தின் மேல் பாம்பு படம் எடுப்பதுபோல் இருக்கும் ரகசியம் இதுவே...

جاري تحميل الاقتراحات...