𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 7 قراءة Mar 11, 2023
வெட்டுவான் கோயில், கழுகுமலை, தூத்துக்குடி
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடவரைக்கோயில் இது சுமார் 1200 வருடங்கள் பழமையானது பாண்டியர்களின் கட்டடக்கலைக்கு ஒரு மகுடமாக விளங்குகிறது தமிழர்கள் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றும் அற்புத கோவில். தூத்துக்குடி மாவட்டம்,
கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஒரேபாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் கி.பி.8ம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது
7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோயிலின் அடிப்பகுதி மட்டும் முழுமை பெறாமல் இருக்கிறது. இப்போது கோயில் கருவறைக்குள்
சிவலிங்கத்துக்குப் பதில் பிள்ளையார் சிலை வைத்து வணங்குகிறார்கள். தமிழகத்தின் 'எல்லோரா' என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலை தமிழர்களாக நாம் ஒவ்வொருவரும் காண வேண்டிய ஒன்று
Location:-
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...