K.Annamalai
K.Annamalai

@annamalai_k

5 تغريدة Dec 24, 2022
கோவை மாநகர மாவட்ட தலைவர் திரு பாலாஜி அவர்களின் தலைமையில், நமது மத்திய இணை அமைச்சர் திரு @vmbjp அவர்களின் முன்னிலையில், நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் நூற்றுக்கணக்கான திட்டங்களில் பயன்பெற்ற சகோதர சகோதரிகளின் அனுபவங்களை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.(1/5)
முத்ரா கடன் திட்டத்தில் ஒரு லட்ச ரூபாய்க் கடன் பெற்று சிற்றுண்டி அமைத்து முன்னேற்றம் கண்ட திருமதி கிருஷ்ணவேணி அவர்கள்; ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக இலவச சிகிச்சை பெற்ற திருமதி யஷோதா, திருமதி தீபா மற்றும் திரு மணி அவர்கள்; (2/5)
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டப் பயனாளிகள் திருமதி முத்துலட்சுமி மற்றும் திருமதி அமுதா அவர்கள்; இசராம் திட்டப் பயனாளியான திருமதி இந்திராணி ஆகிய அனைவரையும் கௌரவித்ததில் மகிழ்ச்சி. (3/5)
மேலும், இந்திய அரசின் Operation Ganga நடவடிக்கையால் நமது தேசத்திற்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட மாணவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர். (4/5)
எவரும் எட்டிப் பிடிக்க முடியாத பாரதப் பிரதமர் @narendramodi அவர்களின் எட்டு ஆண்டு சாதனைகளுக்கு நன்றிகளையும் மகிழ்ச்சியையும் நல்வாழ்த்துக்களையும் நல்கிய மக்களுக்கு நன்றி. (5/5)

جاري تحميل الاقتراحات...