𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

6 تغريدة 1 قراءة Mar 11, 2023
மலையாளம் சினிமா ரசிகர்களுக்கு...
இந்த வாரம் OTTல் வெளியான 5 மலையாள படங்களை பற்றி குயிக்ரிவ்யூ.
முதலிடத்தில் இருப்பது ஆசிப்அலி, நிமிஷா நடிப்பில் வெளியான 'INNALE VARE'. படத்தைப் பற்றி மீடியாக்கள், சினிமா விமர்சகர்கள் குறை கூறினாலும், படம் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக இருக்கிறது. ஒரு தோல்வியுற்ற சினிமா கதாநாயகனைகடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்
OTT: SONYLIV
2வது இடத்தில் 'TWENTY ONE GRAMS' அனூப்மேனன் நடிப்பில் பிபின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் சில வாரங்களுக்குள் தொடர் கொலைகள் நடக்கின்றன. அதனை விசாரிக்க கதாநாயகன் வருகிறார் அவரது வாழ்க்கையில் நடந்த சோகத்திற்கும் நடக்கும் குற்றத்திற்கும் என்ன காரணம்.
OTT: DISNEY HOT
3 இடத்தில் இருப்பது நிகிலா விமல் அற்புத நடிப்பில் வந்த காமெடி படம். கதை என்று ஒன்றும் இல்லை லாக்டோன் காலத்தில் அக்கா தம்பி இடையே நடக்கும் சண்டைகள் தான். பெற்றோர்கள் ஆண், பெண் என்று பேதம் காட்டாமல் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பது கருத்து.
OTT; AMAZON PRIME
4 இடத்தில் இருப்பது 'NO WAY OUT' ரமேஷ் பிஷாரடி ஒன் மேன் ஷோ என்று கூறலாம். கதாநாயகன் என்ஆர்ஐ ரிட்டன் கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயல்வது கதை. படம் கொஞ்சம் போர் அடிக்கிறது.
OTT: AMAZON PRIME
5 இடத்தில் 'PATHROSINTE PADAPPUKAL' காஸ் ஏஜென்சியில் பணிபுரியும் பாத்ரோஸ் 4 குழந்தைகளைக் கொண்ட குடும்பம். 2வது பையன் டோனியை பற்றிய கதை இது அவன் ஒரு சோம்பேறி. இதிலும் பெருசாக கதை ஒன்றுமில்லை நடக்கும் நிகழ்வுகளை படம் நன்றாக இல்லை பார்க்க வேண்டிய அவசியமில்லை
OTT: ZEE 5

جاري تحميل الاقتراحات...