𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

5 تغريدة Mar 11, 2023
டீ வேலி ரிசார்ட்.
பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் இயற்கையை ரசிக்கும் ஒரு பெரிய வியூ பாயிண்ட் உள்ள ரூமில் இருந்தால் எப்படி இருக்கும். அது மாதிரி ஒரு பூலோக சொர்க்கத்தின் ஒரு பகுதிதான் இந்த ரிசார்ட். குடும்பத்தினருடன் சென்று உண்மையான ஓய்வுநாளை அமைதியாக
எந்த ஒரு சத்தமும் இன்றி அனுபவித்து மகிழ ஏற்ற இடம். இது மூணார் டவுனில் இருந்து 6KM தூரம்தான்.
இங்கு ஒருநாள் காட்டேஜில் தங்க வாடகை 3400 ரூபாய் காலை உணவு உட்பட்டு (சீசன்னைப் பொறுத்து வேறுபடும்) ஆனால் தாராளமாக கொடுக்கலாம். இங்கே உள்ள உணவகத்தில் எல்லா உணவுகளும் மிக தரமான
சுவையாக இருக்கின்றது. இரவு 7 மணிக்கு கேம்ப்பயர் மற்றும் பார்பிக்யூ சிக்கன் உண்டு அதற்கு தனியாக பேமெண்ட் செய்ய வேண்டும். காலையில் ப்ரேக்பாஸ்ட் முடிந்து ஜீப் சவாரியில் பெரும்பங்குத்து என்னும் நீர் வீழ்ச்சிக்கு போய் குளிக்கலாம். இங்க இருந்து ஒன்றரை கிலோ மீட்டரில் பொத்தமேடு வியூ
பாயிண்ட் உள்ளது கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு ஸ்பாட். (ஆனால் எனக்கு காட்டேஜ் விட்டு வெளியில் செல்ல மனமில்லை) நீங்கள் காட்டேஜில் தங்க விருப்பம் இல்லை என்றால் இங்கேயே கேம்ப் செட்டப் உண்டு அதற்கு ஒரு கேம்ப் 1300 ரூபாய் தான். அதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.
நீங்கள் அடுத்த முறை மூணார் சென்று இந்த ரிசார்ட்டில் தங்கினால் அதை உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்

جاري تحميل الاقتراحات...