𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 7 قراءة Mar 11, 2023
பெரிய லாலா அல்வா கடை, தென்காசி
அல்வா என்றாலே திருநெல்வேலி இருட்டுக்கடை தான். ஆனால் அதைவிட பதமாக, சுவையாக தென்காசிலையே கிடைக்கின்றது பெரிய லாலா அல்வா கடையில். அதற்குக் காரணம் இந்த கடையின் உரிமையாளர் கிருஷ்ணா சிங் இருட்டுக்கடை அல்வா கடையின் உறவினர். இவர்கள் ராஜஸ்தான்
மாநிலத்திலிருந்து இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலப்போக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கிய இவர்களின் கோதுமை அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாக சுவையாக இருந்ததால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது.
இக்கடையின் பெயர் கிருஷ்ண விலாஸ் என்பதாகும். இக்கடை தென்காசியில் அப்போது பெரிய பலகார கடை என்பதால் பெரிய லாலா கடை என்றே அழைக்கின்றனர். இது 110 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது இக்கடையை கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான சுப்பு சிங், மோகன் சிங் நடத்தி வருகின்றனர்.
இக்குடும்பத்தினர் அல்வா சுவையாக இருப்பதற்கு தாமிரபரணி மற்றும் சிற்றாறின் தண்ணீரே என்று கூறுகின்றனர்.
இக்கடை தென்காசி கோவில் அருகிலேயே உள்ளது. நீங்கள் அடுத்த முறை குற்றாலம் சென்றால் அல்வா வாங்க திருநெல்வேலி செல்ல தேவையில்லை.
லோகேஷன்:
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...